புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஜன., 2016

தமிழ் மக்கள் பேரவை தொடர்பில் முரண்பாடு! அவசர கூட்டத்திற்கு விக்னேஸ்வரனிடம் கோரிக்கை


வட மாகாண சபை ஆளும் கட்சியினருடனான கூட்டத்தை நாளை புதன்கிழமை அவசரமாகக் கூட்டுமாறு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் நேற்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பேரவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், அமைச்சர்கள், ஆளுங்கட்சி உறுப்பினர்கள் 26 பேர் கையெப்பமிட்டு இது குறித்த கோரிக்கை கடிதம் ஒன்றை முதலமைச்சருக்கு நேற்று அனுப்பி வைத்துள்ளனர்.
தமிழ் மக்கள் பேரவை உருவாக்கம் தொடர்பில் கூட்டமைப்பிலுள்ள ஒரு தரப்பினர் கடும் அதிருப்தி வெளியிட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக எழுத்துள்ள முரண்பாடுகளின் பின்னணியில் இந்த அவசர கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கடிதத்தில் கூட்டமைப்பிலுள்ள மாகாண சபை உறுப்பினர்கள் அனைவரும் கையெழுத்திடவில்லை.
பேரவை உருவாக்கம், அதல் முதலமைச்சரின் பங்கேற்பு தொடர்பில் கடந்த 17ம் திகதி கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. பின்னர் அக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இது தொடர்பில் கூட்டமைப்பிலுள்ள ஒரு தரப்பினர் கடும் அதிருப்தி வெளியிட்டனர். இந்நிலையிலேயே அவசர சந்திப்புக்கு ஏற்பாடு செய்யுமாறு முதலமைச்சரிடம் கடிதம் மூலம் கோரப்பட்டுள்ளது.
வினைத்திறனுள்ள மாகாண சபை செயன்முறை, தமிழ்த் தேசியக் கூட்மைப்பாகச் செயற்படுதல், அதிகாரப் பகிர்வு யோசனைகள் விடயத்தில் வட மாகாண சபையின் பங்குபற்றுதல் போன்ற விடயங்கள் தொடர்பில் ஆராயவே இந்தக் கூட்டத்தை ஒழுங்கமைக்குமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்கடித்தத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
வினைத்திறனுள்ள மாகாண சபை நிர்வாகம் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக செயற்படல் ஆகிய இரண்டு பிரதான விடயங்களின் அடிப்படையில் கடந்த 2015 நவம்பர் மாதம் 11 ஆம் திகதி முதல் தங்களுடன் வடக்கு மாகாண சபையின் ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் இரண்டு சுற்றுக் கலந்துரையாடல்களை நடத்தியிருந்தனர்.
இறுதியாக இம்மாதம் 11ம் திகதி நடந்த சந்திப்பின்போது உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட கருத்துக்களுக்கு பதில்கூறும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு 17ம் திகதி விசேட சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தீர்கள். 
குறித்த சந்திப்பில் பேரைவைத் தெலைவர் மற்றும் அமைச்சர்களை இணைத்துக்கொள்வது என்றும் தீர்மானிக்ககப்பட்டது.
இருப்பினும் அன்றைய சந்திப்பு தங்களுடைய தனிப்பட்ட காரணங்களின் நிமிர்த்தம் பிற்போடப்பட்டது என்று எமக்கு தங்களின் பிரத்தியே செயலாளர் ஊடாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் பேரரவைத் தலைவர் அமைச்சர்கள் உட்பட உறுப்பினர்கள் அனைவரும் குறித்த சந்திப்பானது மிகவும் அவசரமாக இடம்பெறவேண்டுமென்ற என்ற கருத்தையே கொண்டுள்ளனர். 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு குறித்து மிக நீண்ட காலமாக அசெயற்பட்டு வருகின்ற தமிழ் மக்களின் ஏகொபித்த அங்கீகாரத்தைப் பெற்ற அரசியல் கட்சி என்ற வகையில் விரைவில் இலங்கை அரசாங்கத்தினால் முன்வைக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பு யோசனைகள் விடயத்தில் மிகவும் பொறுப்புணர்வோடு செயற்படக் கடமைப்பட்டுள்ளது.


அந்த வகையில் வடக்கு மாகாணத்தின் ஆளும் தரப்பாகிய நாம் அதிகாரப் பகிர்வு விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு காத்திரமான பங்களிப்பை வழங்க வேண்டிய பிரதான தரப்பான இருக்கினறோம்.
இதற்காக விசேட செயலணி ஒன்றை வடக்கு மாகாண சபையில் ஏற்படுத்த வேண்டிய தேவையும் இருக்கிறது.
எனவே இந்த விடயங்கள் ஆராய அவசர சந்திப்புக்கு எதிர்வரும் 20 ஆம் திகதி நேரம் ஒதுக்கித் தருமாறு தயவோடு கேட்டுக்கொள்கிறோம் என்றுள்ளது.

ad

ad