புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஜன., 2016

புதிய அரசியல் கட்சியின் தலைமைத்துவம் மஹிந்தவிற்கா அல்லது கோத்தாவிற்கா?


ஒன்றினைந்த எதிர் கட்சிகளின் உறுப்பினர்களால் ஆரம்பிக்கப்படவுள்ள புதிய அரசியல் கட்சிக்கான தலைமைத்துவம் தொடர்பான விவாதங்கள் அண்மைக்காலத்தில் ஊடகங்களில் பிரபலமாக பேசப்பட்டு வருகின்றது.
இதனடிப்படையில்,  புதிய கட்சியின் தலைமைப்பதவி மஹிந்த ராஜபக்ஸவிற்கு வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளே அதிகம் காணப்படுவதாகவும் அதற்கான கலந்துறையாடல்களே அங்கு இடம்பெற்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் மஹிந்த ராஜபக்ஸ இந்த தலைமைப் பொறுப்பை நிராகரிக்கும் சந்தர்ப்பத்தில் முன்னாள் பாதுகாப்பு செயலாளரான கோத்தபாயவிற்கு வழங்குவதற்கு கட்சியின் உறுப்பினர்களால் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், எதிர்கட்சிகளின் தலைவர்களிடையே மக்களினால் அதிகமாக விரும்பப்படும் நபராக மஹிந்த ராஜபக்ஸ காணப்படும் அதேவேளை, இதற்கு அடுத்த இடத்தில் கோத்தபாய ராஜபக்ஸ இருக்கிறார். எனவே, பெரும்பான்மை மக்களது ஆதரவு எப்போதும் ராஜபக்ஸ சகோதரர்களுக்கு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, இவர்களை இணைத்துக் கொண்டு இந்த அரசாங்கத்திற்கு எதிராக புதிய கட்சியை உருவாக்கி நாட்டு மக்களுக்கு சேவைகளை செய்யும் பொருட்டு இந்த ராஜபக்ஸ சகோதரர்களை மக்களிடம் கொண்டு செல்ல உத்தேசித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒன்றினைந்த எதிர்கட்சிகளின் ஒன்றுகூடலுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்களில் சிலரோடு தேசிய சுதந்திர முன்னணி, பிவிதுரு ஜாதிக ஹெல உறுமய, ஜனநாயக இடதுசாரி முன்னணி, லங்கா சமசமாஜக் கட்சி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல எதிர் கட்சிகளின் உறுப்பினர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

ad

ad