புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 பிப்., 2016

நடுவானில் விமானத்தில் ஓட்டை: 74 பயணிகள் தப்பிய அதிசயம்! (வீடியோ)

11 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது விமானத்தின் ஜன்னல் உடைந்தது. இதனால், 74 பயணிகளுடன் விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார் விமானி.
சோமாலியா தலைநகர் மொகடிஷூவில் இருந்து,  டிஜிபோட்டிக்கு டால்லோ விமான நிறுவனத்திற்கு சொந்தமான
விமானம் சென்றுகொண்டிருந்தது. விமானத்தில் 74 பயணிகள் மட்டுமே இருந்தால் அவர்கள் விரும்பிய இடத்தில் அமர்ந்துள்ளனர்.

இந்நிலையில் விமானம் புறப்பட்ட 20 நிமிடத்தில்,  சுமார் 11 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது விமானத்தின் வலது பக்கத்தில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது போன்ற சத்தம் கேட்டுள்ளது. பின்னர் விமானத்தில் தீ பற்றியதால் ஓட்டை ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் கூக்குரலிட்டுள்ளனர்.

உடனடியாக விமானி மொகடிஷூக்கு விமானத்தை திருப்பி அவசரமாக தரையிறக்கினார். பின்னர் விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். விமானியில் இந்த செயலால் பெரும் விபத்தும் உயிர் பலியும் தடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வெடிகுண்டு தாக்குதல் காரணமாகவே விமானத்தில் ஓட்டை ஏற்பட்டதாக விமானி தெரிவித்துள்ளார். இதனையடுத்து இது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

ad

ad