புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 பிப்., 2016

இலங்கையில் முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா மந்திரி ஆகிறார்?

லங்கையில் ராணுவ தளபதியாக இருந்தவர் சரத் பொன்சேகா (வயது 65). விடுதலைப்புலிகளை வீழ்த்தியதில் முக்கிய பங்கு வகித்த இவர்
பின்னர் அரசியலில் இறங்கி, ஜனநாயக கட்சி என்ற பெயரில் ஒரு கட்சியை தொடங்கினார். இந்த நிலையில், அவர் இலங்கையை ஆளும் கூட்டணியான ஐக்கிய தேசிய முன்னணியில் சேர்ந்தார். இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதைத் தொடர்ந்து சரத் பொன்சேகா, அடுத்த வாரம் பாராளுமன்ற உறுப்பினர் ஆகி, மந்திரி ஆவார் என தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால், அவருக்கு எதிராக போர்க்குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் ஜெய்த் ராத் அல் உசேன் இந்த வாரம் கொழும்பு வருகிறார்.
இந்த நிலையில் ஆளும் கூட்டணியில் தனது கட்சியை இணைத்தது குறித்து சரத் பொன்சேகா, கொழும்பு நகரில் நிருபர்களிடம் பேசுகையில், “நான் எத்தகைய விசாரணையையும் சந்திக்க தயார் என ஏற்கனவே கூறி உள்ளேன். எங்களிடம் மறைப்பதற்கு ஏதுமில்லை” என கூறினார்.

ad

ad