புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 பிப்., 2016

பசில் ராஜபக்சவிடம் நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவு நேற்று 6 மணித்தியாலங்களாக விசாரணை

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவிடம் நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவு நேற்று புதன்கிழமை 6 மணித்தியாலங்களாக விஷேட விசாரணைகளை நடத்தியது.
சொத்துக்குவிப்பு உள்ளிட்ட மூன்று விடயங்கள் குறித்தும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதியூடாக கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது உள்ளூராட்சி மன்றங்களுக்கு குழாய்கள் பகிர்ந்தளிக்கப்பட்டமை தொடர்பிலும் இதன் போது விசாரணை செய்யப்பட்டு விஷேட வாக்கு மூலம் பெறப்பட்டதாக பொலிஸ் தலைமையகத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நேற்று காலை 10.10 மணிக்கு நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் உத்தரவுக்கு அமைய கோட்டையில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தில் பசில் ராஜபக்ச ஆஜரானார்.
இதனையடுத்து பசில் ராஜபக்சவிடம் முதலில் சொத்து குவிப்பு குறித்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
கம்பஹா ஒருதொட்ட பிரதேசத்தில் உள்ள இடமொன்று பசில் ராஜபக்சவினால் 30 மில்லியன் ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்பட்டு அதில் 80 மில்லியன் ரூபா செலவில் கட்டிடம் ஒன்று கட்டப்பட்டுள்ளது.
அத்துடன் மல்வானை பகுதியில் 17 ஏக்கர் காணியொன்று 64 மில்லியன் ரூபாவுக்கு பசில் ராஜபக்சவினால் கொள்வனவு செய்யப்பட்டு அதில் 120 மில்லியன் ரூபா செலவில் கட்டிடம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மாத்தளை புரவ்ன் ஹில் பகுதியில் 50 மில்லியன் ரூபா செலவில் ஒன்றரை ஏக்கர் நிலம் அவரால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையான சொத்துக்கள் கொள்வனவு செய்யப்பட்ட முறைமை, அதற்கான முதலீட்டு மூலங்கள் அல்லது பணம் சம்பாதிக்கப்பட்ட மற்றும் செலவழிக்கப்பட்ட முறைமை ஆகியன தொடர்பிலேயே நேற்று நீண்ட நேரம் விசாரணைகள் செய்யப்பட்டுள்ளன.
அத்துடன் அந்த சொத்துக்களின் உரிமை தொடர்பிலும் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து கடந்த ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதியில் எடுக்கப்பட்ட 36 மில்லியன் ரூபாவால் உள்ளூராட்சி மன்றங்களுக்கு குழாய்கள் கொள்வனவு செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இது தொடர்பிலும் வாக்கு மூலம் ஒன்று பதிவு செய்யப்பட்ட பின்னர் மாலை 4.15 மணியளவில் பசில் ராஜபக்ச நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவிலிருந்து வெளியேறிச் சென்றார்.

ad

ad