புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 பிப்., 2016

எனக்கு சுதந்திரம் இல்லை, அதனால் சுதந்திர தின நிகழ்வுகளில் பங்கேற்க மாட்டேன் - மஹிந்த

எனக்கு சுதந்திரம் இல்லை, அதனால் சுதந்திர தின நிகழ்வுகளில் பங்கேற்க மாட்டேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
நாரஹென்பிட்டி அபயாராமயவில் நேற்று மாலை இத்தாலில் தொழில் புரியும் இலங்கையர்கள் சிலரை சந்தித்ததன் பின்னர், ஊடகவயிலாளர்களிடம் இதனைத் தெரிவித்துள்ளார்.
இன்று சுதந்திரம் இருப்பதாக நினைத்துக் கொண்டிருந்தேன் எனினும் என்ன சுதந்திரம் இருக்கின்றது என்பது கேள்விக்குறியாகவே காணப்படுகின்றது.
கூட்டு எதிர்க்கட்சியுடன் இணைந்து அவர்களுடன் செயற்பட தீர்மானித்துள்ளேன்.
புதிய அரசியல் கட்சியில் அனைத்து சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்களும் இணைந்து கொள்வார்கள்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 90 முதல் 95 வீதமானவாகள் புதிய கட்சியில் இணைந்து கொள்வார்கள்.
நான் செல்லும் இடமெல்லாம் புதிய கட்சி பற்றி மக்கள் கேட்கின்றார்கள். தற்போது அதற்கான உரிய சூழ்நிலைமை உருவாகியுள்ளது. சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் தாக்கப்படுகின்றனர்.
முதலில் மஹிந்த ராஜபக்சவை யார் தாக்கினார்கள்? ஐக்கிய தேசியக் கட்சிக்கு முன்னதாகவே சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்களே என்னை வேண்டாம் என்றார்கள்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்பது கொள்கையே அன்றி பெயர்ப்பலகை கிடையாது.
ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் அமைத்தால் 20 ஆண்டுகளுக்கு அசைக்க முடியாது என்ற கருத்து பொய்யானது, நானும் அப்படித்தான் நினைத்துக் கொண்டு ஆட்சி செய்தேன், வீட்டுக்கு செல்ல நேரிட்டது என மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ad

ad