புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 பிப்., 2016

"அந்த காலத்தில் இணைய விரும்பாத நாங்கள் எதற்காக சேர வேண்டும்"-கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கிருஸ்ணபிள்ளை துரைராஜசிங்கம்


 அந்த காலத்தில் இணைய விரும்பாத நாங்கள் எதற்காக சேர வேண்டும்



ஒற்றையாட்சி என்பது இனங்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் சமஷ்டி அடிப்படையிலான கூட்டாட்சி மூலமே சகல இனங்களும் இணைந்து நாட்டை ஒன்று படுத்த முடியும் என கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கிருஸ்ணபிள்ளை துரைராஜசிங்கம் தெரிவித்தார்.


மட்டக்களப்பு ஏறாவூர் ஐந்தாம் குறிச்சி விபுலாந்தா வித்தியாலய மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கும் நிகழ்வில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில்!

தற்போது புதிய அரசியலமைப்பை உருவாக்குவது தொடர்பாக ஒற்றையாட்சியா? சமஷ்டியா? என பல கருத்துக்கள் முன் வைக்கப்படுகின்றன. சமஷ்டி ஆட்சி முறை வழங்கினால் நாடு பிரிந்து விடும் தமிழர்கள் இந்தியாவுடன் இணைந்து தனி மாநிலமாக உருவாக்கி விடுவார்கள் என பொரும்பான்மை சமூகத்தினர் கூறுகின்றனர்.

இலங்கை சுதந்திரமடைவதற்கு முன்பிலிருந்தே நாங்கள்இந்தியாவுடன் தொடர்பிலிருந்தோம். எங்களுடைய அறிஞர்கள் எல்லாம் இந்தியாவுக்குச் சென்று வந்தனர் ஆனால் இந்தியாவுடனோ அல்லது தமிழ்நாட்டுடனோ சேர்ந்து வாழவேண்டும் என்று ஒரு போதும் நினைத்ததில்லை. அந்த காலத்தில் இணைய விரும்பாத நாங்கள் இந்தியா பல மாநிலங்களாக இருக்கின்ற போது எதற்காக சேர வேண்டும்.

ஒரே நாடுக்குள்ளே அரசியல் தீர்வு என்பது தான் எங்களுடைய கொள்கை 2009ஆம் ஆண்டுக்கு பின்பு நடைபெற்ற சகல தேர்தல்களிலும் நாங்கள் அதற்கான ஆணையை மக்களிடம் பெற்றிருக்கிறோம்.

ஒரே நாட்டுக்குள் எங்களுடைய மொழி, கலாசாரம் வாழ்விடத்தையும் பாதுகாத்துக் கொள்ளக்கூடிய வகையிலான கூட்டாட்சி எனப்படும் சமஷ்டி முறையிலான ஆட்சி முறை ஒருபோதும் பிரிவினைக்கு எந்தவகையிலும் இடம் கொடுக்காது.

சமஷ்டி ஆட்சி நிலவுகின்ற நாடுகளிலிருந்து யாரும் விலகிச் சென்றார்களா என்று சிங்கள தலைவர்கள் கூறட்டும். ஆனால் ஒற்றையாட்சி நாடுகளிலிருந்து ஏனைய இனங்கள் ஒற்றையாட்சி ஒழிக்க வேண்டும் அதிகாரம் பகிரப்பட வேண்டும் என்று போராட்டங்கள் நடைபெறுகின்றன.

ஒற்றையாட்சி என்பது நாட்டின் பிரிவினைக்கிட்டுச் செல்கின்ற ஒன்றாக அமையும் ஆனால் சமஷ்டி ஆட்சி முறையானது உண்மையிலேயே நாட்டில் கூட்டாட்சியை ஏற்படுத்தக் கூடியது. இவ்விடயம் தொடர்பாக பாராளுமன்றத்தால் தெரிவு செய்யப்பட்ட ஆணைக்குழு பொதுக்களின் கருத்துக்களை பெறுவதற்கு வருவார்கள். அவர்களிடம் இணைந்த வடகிழக்கில் கூட்டாட்சி வேண்டும் என கூறவேண்டும்” என்றும் கூறினார்.

ad

ad