புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 பிப்., 2016

வேட்பாளர் லிஸ்ட்: ஜெ.முடிவில் திடீர் மாற்றம் !

 தன்னுடைய பிறந்த நாளான  பிப்.24 அன்று, அதாவது நாளை ஜெயலலிதா வெளியிடுவார் என்ற தகவல் கடந்த சில வாரங்களாகவே 'ஸ்ட்ராங்' பயணத்தில் இருக்கிறது. இந்நிலையில் அந்த லிஸ்ட் வெளியிடுவதில் மாற்றம் இருக்கும் என்று புதிய தகவல் றெக்கை கட்டியுள்ளது.


பிறந்தநாளாக இருந்தாலும் பிப்ரவரி 24, 2016 அன்று  கீழ்நோக்கு நாளாக அமைந்திருப்பதால் மாற்றுக் கட்சியிலிருந்து வெளியேறியவர்கள், தேமுதிகவில் எம்.எல்.ஏ.க்களாக இருந்து வெளியேறியவர்கள் என பலர் அதிமுகவில் இணையும் இணைப்பு நாளாக அந்த நாளை பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதுதான் அதிமுகவின் முடிவாக இருக்கிறது.

பிப்ரவரி 25 அன்று மேல்நோக்கு நாள் என்பதோடு, பஞ்சாங்க கணக்குப்படி அன்றைய தினத்திலிருந்து சமநோக்கு நாளாக இருக்கிற மறுநாள் (பிப்ரவரி 26) வரையில் வேட்பாளர் லிஸ்ட்டை வெளியிட ஆரம்பித்தால்,  வெற்றி வாய்ப்பு அமோகமாக இருக்கும் என்று ஜோதிட வட்டாரங்கள் கணித்துக் கொடுத்திருப்பதால் வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதில் கண்டிப்பாக மாற்றம் உண்டு என்கின்றனர்.

அதேபோல் இந்தியத் தேர்தல் ஆணையம் தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கான 'தேர்தல் நடத்தை விதிகளை' மார்ச்  மாதம் முதல் வாரத்தில் அறிவிக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஜெயலலிதா ராசிப்படி குரு 9-ம் இடத்தைப் பார்க்கும் நாள் மே-8 என்பதால், இந்த தேர்தல் தேதி அறிவிப்புக்குப் பின்னர் ஜெ.வின் பலம் இன்னும் கூடுதலாக இருக்கும் என்று கார்டன் வட்டாரத்தினர் பெரிய நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

கடந்த 2011 சட்டமன்ற தேர்தலின் போது,  அதிமுக கூட்டணிப் பேச்சு வார்த்தையில் தேமுதிக, சிபிஐ, சிபிஎம், மதிமுக, புதிய தமிழகம், பார்வர்டு பிளாக், ஆகிய பிரதான கட்சிகள் இருந்தன. ஆனால், தேமுதிக கேட்டிருந்த விருகம்பாக்கம் தொகுதிக்கு கமலக்கண்ணன், சிபிஎம் கேட்டிருந்த பெரம்பூர் தொகுதிக்கு வெற்றிவேல் என்று அந்த லிஸ்ட் இருந்தது.

கூட்டணியில் இருந்தவர்கள் 'தங்களுக்கு' என்று கேட்டிருந்த அத்தனை தொகுதிகளையும்  காலிசெய்து,  அதிமுக சார்பில் போட்டியிடும் 160 வேட்பாளர்களை முதல் லிஸ்ட்டில் ஜெயலலிதா வெளியிட்டு விட்டார்.

தற்போது முதல்வர் தொகுதியாக இருக்கும் ஆர்.கே.நகருக்கு மதுசூதனன் பெயர்தான் இந்த லிஸ்ட்டில் முதலில் இருந்தது. சிபிஎம் பெரம்பூரை விட்டுத்தர மாட்டோம் என்றதால் அது இடம் மாறியது. சிபிஎம்மின் சௌந்தரராஜன் சீட் வாங்கி எம்எல்ஏ ஆனார். அதேபோல் விருகம்பாக்கம்,  தேமுதிகவின் பார்த்தசாரதிக்குப் போனது.

ஆர்.கே.நகருக்கு வெற்றிவேல் வந்தார். மதுசூதனன் சீட் இல்லாமல் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப் பட்டார். இப்படி அதிமுக கூட்டணியில் இருந்த கட்சிகள் எல்லாமே உஷ்ணத்தில் கொதிக்கும்படியாக முதல் லிஸ்ட்டை மார்ச்  16, 2011 அன்று இரவு வெளியிட்டு ஷாக் கொடுத்தார் ஜெயலலிதா.
இத்தனைக்கும் அன்று காலையில்தான் யாருக்கு எந்த இடம், எவ்வளவு சீட் என்பது குறித்த கூட்டணிப் பேச்சு வார்த்தை நடந்து முடிந்திருந்தது.

கூட்டணியினரின் கொதிப்பால் டோட்டல் லிஸ்ட்டே மாற்றப்பட்டு புதிய லிஸ்ட் வெளியானது. அந்த முதல் லிஸ்ட் ஜெ.வின் கவனத்துக்கு கொண்டுவரப்படாமலேயே, அவரின் தோழி சசிகலா தரப்பில் இருந்து வெளியானது என்ற தகவலும் அப்போது பரபரப்பாக  வலம் வந்தது.

அதனால் கடந்த 2011 சட்டமன்ற தேர்தல் போல குளறுபடிகள் இல்லாத வகையில்,  இறுதி செய்யப்பட்ட லிஸ்ட்டை முதலிலேயே வெளியிட வேண்டும் என்பதில் இந்த முறை ஜெ. உறுதியாக இருக்கிறார் என்கிறார்கள் அதிமுகவினர்.

ad

ad