புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 பிப்., 2016

அண்ணா அறிவாலயத்தில் வேட்பாளர் நேர்காணல்



அண்ணா அறிவாலயத்தில் வேட்பாளர் நேர்காணல் நடைபெறுகிறது. கருணாநிதி வரும்போது வெடி போடப்படுகிறது. பிறகு வேட்பாளர் நேர்காணல்
. கருணாநிதிக்கு இடப்பக்கத்தில் ஸ்டாலின். வலது பக்கம் அன்பழகன், அடுத்து துரைமுருகன். அடுத்து ஆர். எஸ். பாரதி.
வருகிற வேட்பாளர் தேர்வர்கள் கருணாநிதி ஸ்டாலினை பார்த்தபடி அமர்கின்றனர். அன்பழகனை மயிருக்கும் மதிப்பதில்லை. அவரும் மரியாதையை எதிர்பார்க்கவில்லை. 10 நிமிடத்துக்கு ஒரு முறை பாதாம் பால் வரவழைத்து சாப்பிட்டு விட்டு, நாற்காலியில் சாய்ந்து விடுகிறார் 3 நிமிடத்துக்கு ஒரு முறை கொட்டாவி விடுகிறார். அவ்வளவு தான். துரைமுருகன் அன்பழகனின் கொட்டாவிக்கு இசைவாய் அவரும் அவ்வப்போது கொட்டாவி விடுகிறார். ஆர். எஸ். பாரதி அவ்வபோது எழுந்து வெளியில் சென்று, வருகிற வேட்பாளர்களில் தமிழர் வேட்பாளர்கள் இருந்தால் அவர்களைப் பின்னுக்குத் தள்ளி நிறுத்தி விட்டு, தெலுங்கு வேட்பாளர்களை முன்னுக்கு நிறுத்தி அவர்களுக்கு முன்னுரிமைக் கொடுத்து உள்ளே அழைப்பதன் தன் மொழி மற்றும் இனப்பாசத்தைக் காட்டுகிறார்.
முதல் கேள்வியே, எத்தனை கோடி செலவு செய்வீர்கள் ? என்பதுதான். அந்த பதில் திருப்தி உற்றால் தான் அடுத்த கேள்வி. இல்லாவிட்டால் வாசலைக் காட்டுகிறார்கள். சிலர் சென்ற ஒரு நிமிடத்தில் வெளியில் வந்து விடுகிறார்கள். அந்தக் கேள்வி ஒருமுறை ஒருவரை நோக்கி, 'எத்தனை லட்சம் கோடி செலவு செய்வீர்கள் ?' என்று ஸ்டாலினால் வாய்த் தவறி கேட்கப்பட்டு விட்டது. சட்டென நாக்கைக் கடித்துக் கொண்டு விட்டார் அவர். கருணாநிதி கண்ணாடியை ஏற்றி மாட்டிக் கொண்டு ஸ்டாலினை ஏறிட்டுப் பார்த்தார். அனபழகனுக்குத் தூக்கம் கலைந்து விட்டது. துரைமுருகன், 'அட தேவுடா !' என்றார். ஆர்.எஸ். பாரதி தலையை மூன்று முறை உதறிக்கொண்டார்.
இன்னொரு வேட்பாளரிடம், 'கட்சிக்கு உங்கள் பங்களிப்பு என்ன ? ' என்று கேட்டார் கருணாநிதி. அந்தப் பெண், நான் பல போராட்டங்களில் கலந்துக் கொண்டிருக்கிறேன். சிறை சென்றிருக்கிறேன் என்று சொல்ல, பங்களிப்பு என்பது அதெல்லாம் அல்ல, இப்போதே இங்கேயே கட்சிக்கு நான் நிதி தாருங்கள் என்றால், எவ்வளவு தருவீர்கள், எனக்கு எவ்வளவு தருவீர்கள் என்று கேட்டார் ஸ்டாலின். கட்சிக்குத் தரலாம், உங்களுக்கு எதற்கு தரவேண்டும் என்று புரியாமல் விழித்தார் பாவம், அவருக்கு திமுகவின் உள்சட்டத்திட்டங்கள், நிலவரங்கள் என்னவென்று தெரியவில்லை.
ஒரு பெண் வேட்பாளரிடம், எவ்வளவு செலவு செய்வீர்கள், என்று கேட்க, அதற்கு அவர், தேர்தல் ஆணையம் தடுக்கமா இருந்தால் இருபது கோடி செலவு செய்வேன் என்றார். அதைத் தொடர்ந்து அவரிடம் அடுத்தது கேட்கப்பட்ட கேள்விகள் தான் பலே கேள்விகள். என்ன தொழில் செய்கிறீர்கள், எவ்வளவு நகைகள் இருக்கிறது, எவ்வளவு பணம் இருக்கிறது, வீட்டில் எவ்வளவு இருக்கிறது, வெளியில் எவ்வளவு இருக்கிறது, வங்கியில் எவ்வளவு இருகிறது என்றெல்லாம் சரமாரியாக கேட்கப்பட்டது.
வெளியில் ஓடி வந்த அவர், 'என்னவோ இன்கம்டாக்ஸ் அதிகாரிகள் கேள்வி கேட்பதைப் போலல்லவா இருக்கு. பணம் நகை சொத்து விவரம் எல்லாம் கேட்கிறார்களே. சீட்டுக் கொடுத்தா ஜெயிப்பாயா, மாட்டாயா என்றெல்லாம் எதுவும் கேட்கவே இல்லையே. நானும் அவங்க கேட்ட எல்லாவற்றையும் உளறி விட்டேனே. ஒருவேளை இன்றிரவு வீடு புகுந்து விடுவார்களோ, அடி ஆத்தி, இந்நேரம் புகுந்து இருந்தாலும் சொல்லதற்கு இல்லையே.. வாங்க வாங்க சீக்கிரமா வீட்டுக்கு போகலாம், என்னாச்சோ தெரியலையே என் பொழைப்பு ' என்று கத்தியபடி புருஷனை இழுத்துக் கொண்டு ஆட்டோவில் ஏறி பறந்தார்.

ad

ad