புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 பிப்., 2016

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு முறையீட்டு மனு மீதான இறுதி வாதம் சுப்ரீம் கோர்ட்டில் தொடங்கியது

சொத்துகுவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து பெங்களூர் தனி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நீதிபதி குன்ஹா அளித்த இந்த தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா உள்பட 4 பேரும் கர்நாடக ஐகோர்ட்டில் அப்பீல் செய்தனர். நீதிபதி குமாரசாமி இந்த அப்பீல் மனுவை விசாரித்து, ஜெயலலிதா உள்பட 4 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.

இதை எதிர்த்து கர்நாடக அரசும் தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகனும் சுப்ரீம் கோர்ட்டில்  மேல் முறையீடு செய்தனர். ஜெயலலிதா தரப்பினர் பதில் தருமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து ஜெயலலிதா உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்தனர். இந்த மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை பிப்ரவரி 2-ந் தேதி முதல் நாள்தோறும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திடீரென இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதிகளில் ஒருவரான பினாகி சந்திர கோஷ், அருணாச்சல பிரதேசத்தில் ஜனாதிபதி ஆட்சியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரிப்பதால் ஒரு வார காலம் ஒத்தி வைக்க வேண்டும் என்று ஜெயலலிதா தரப்பில் ஒரு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இதனால் ஜெயலலிதாவின் கோரிக்கை ஏற்கப்பட்டு பிப்ரவரி 23-ந் தேதி முதல் நாள்தோறும் விசாரணை நடைபெறும் என ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே மீண்டும் விசாரணையை மேலும் ஒருவாரம் தள்ளி வைக்குமாறு சுப்ரீம் கோர்ட்டில் ஜெயலலிதா தரப்பு மனு தாக்கல் செய்தது. ஆனால் இதற்கு கர்நாடகா அரசு மிகக் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து மனுத் தாக்கல் செய்தது.

இந்நிலையில் இன்று காலை பினாகி சந்திரகோஷ், அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. அப்போது வழக்கை ஒரு வார காலம் ஒத்திவைக்கக் கோரிய ஜெயலலிதாவின் கோரிக்கையை நீதிபதிகள் அதிரடியாக நிராகரித்தனர். இதனைத் தொடர்ந்து ஜெயலலிதாவுக்கு எதிராக கர்நாடகா அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே தம்முடைய இறுதிவாதத்தை தொடங்கினார். அப்போது, இறுதிவாதத்தை நிறைவு செய்ய 3 நாட்கள் தேவை என தவே குறிப்பிட்டார்.

ஜெயலலிதா சொத்து மதிப்பை கர்நாடகா தனிகோர்ட் மதிப்பிட்டதில் வெளிப்படையான பிழைகள் உள்ளன-.சொத்து மதிப்பீட்டில் பிழைகள் இருந்ததுதான் ஜெயலலிதா விடுதலைக்கான காரணம். அரசு ஊழியர் என்ற அடிப்படையில் தம்முடைய சொத்து விவரங்களை ஜெயலலிதா தெரிவித்திருக்க வேண்டும்.கர்நாடகா ஐகோர்ட் பல அம்சங்களை கணக்கில் எடுத்துக் கொள்ளவே இல்லை.ஜெயலலிதா உட்பட 4 பேரும் அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தியுள்ளனர்ஜெயலலிதா உட்பட 4 பேரும் வருமானத்துக்கு அதிகமாக ரூ55 கோடி சொத்து குவித்துள்ளனர். ஜெயலலிதாவை விடுதலை செய்த தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும்- என தவே வாதாடினார்

ad

ad