புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 பிப்., 2016

நளினி பரோலில் வெளிவர சிறைத்துறை அனுமதி ; தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்கிறார்



 முன்னால் இந்திய பிரதமர் ராஜிவ்காந்தி படுகொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்று பின்னர் 96ல் நடந்த திமுக ஆட்சியில் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட நளினி வேலூர் மத்திய பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 25 ஆண்டுகளாக சிறையில் உள்ளார்.

நளினியின் தந்தை சங்கரநாராயணன், முன்னால் காவல்துறை ஆய்வாளர் ஆவார். அவரது தாயார் பத்மா, செவிலியராக இருந்தார். இருவரும் ஒய்வு பெற்று இருந்தனர்.

சங்கரநாராயணனின் பூர்வீகம் நெல்லைமாவட்டம் வி.கே.புரம். ஒய்வு பெற்றபின் தனது சொந்தவூரில் சங்கரநாராயணன் வசித்து வந்தார். உடல் நலம்மில்லாமல் சில ஆண்டுகளாக சங்கரநாராயணன் இருந்துவந்தார். நளினி பரேலில் சென்று தந்தையை சந்திக்க அனுமதி கேட்டார். தப்போதைய ஜெ., அரசாங்கம்  அதற்கு அனுமதி வழங்கவில்லை.

இந்நிலையில் இன்று 23ந்தேதி மதியம் சங்கரநாராயணன் உடல் நலமில்லாமல் இறந்துள்ளார். இவரது உடல் சென்னையில் அடக்கம் செய்வதற்காக இங்கு கொண்டு வரப்படுகிறது. இந்த தகவல் சிறையில் உள்ள நளினிக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. அவர் வேதனையில் துடித்துள்ளார்.

 தந்தையின் இறுதி பயணத்தில் நளினி கலந்துக்கொள்வதற்கான சட்டப்பணிகள் நடைப்பெற்று வருகிறது. தந்தையின் இறுதிசடங்கில் பங்கேற்பதற்காக நாளை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை பரோலில் வெளிவர வேலூர் சிறைத்துறை அனுமதியுள்ளது.

சங்கரநாராயணன்  இறுதிச்சடங்கு நாளை சென்னை, கோட்டூர்புரத்தில் நடைபெற உள்ளது.

ad

ad