புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 பிப்., 2016

காஷ்மீரில் ராணுவம் போராடிய நிலையில் மசூதிகளில் தீவிரவாதிகளுக்கு பாராட்டு



பம்போர் என்கவுண்டரில் ராணுவம் மற்றும் தீவிரவாதிகள் இடையே சண்டை நடைபெற்ற போது; ‘புனிதப் போர் வீரர்கள்’ என்று மசூதிகளில் ஒலிபெருக்கிகள் மூலம் பாராட்டு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்துக்கு உட்பட்ட பம்போரில் உள்ள தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவன கட்டிடத்தில் தீவிரவாதிகள் மற்றும் ராணுவம் இடையேயான துப்பாக்கி சண்டையானது நேற்று மூன்றாவது நாளில் 3 தீவிரவாதிகளை சுட்டு வீழ்த்தியதை தொடர்ந்து முடிவுக்கு வந்தது. தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 ராணுவ அதிகாரிகள் உள்பட 5 பேர் உயிர் இழந்தனர். இதற்கிடையே ’புனிதப் போர் வீரர்கள்’ என்று தீவிரவாதிகளுக்கு அங்கு சுற்றிஉள்ள மசூதிகளில் பாராட்டு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நேற்று தீவிரவாதிகளுக்கு எதிராக பாதுகாப்பு படையினர் அதிரடி தாக்குதல் நடத்திய நிலையில், என்கவுண்டர் நடந்த பகுதியை சுற்றிய பெரஸ்தாபால், தராங்பால், காத்லாபால் மற்றும் சிம்போராவில் மசூதிகளில் தீவிரவதிகள் புகழ் முழுவதும் பாடப்பட்டு உள்ளது. மசூதிகளில் உள்ள ஒலிப்பெருக்கிகளில் பாகிஸ்தான் ஆதரவு, காஷ்மீர் விடுதலை கோஷங்கள் எழுப்பட்டு உள்ளது. 

தீவிரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்ற வளாகத்திற்குள் அப்பகுதியை சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கூடி, தீவிரவாதிகளுக்கு எதிரான பாதுகாப்பு படையின் நடவடிக்கையை தடுக்க முயற்சி செய்து உள்ளனர். கூட்டத்தை போலீஸ் மற்றும் துணை ராணுவப்படையானது கண்ணீர் புகைக்குண்டுகளை வெடிக்க செய்து தடுத்தது. சிம்போராவில் நடைபெற்ற இச்சம்பவத்தில் இளைஞர்கள் பாதுகாப்பு படையினர் மீது கடுமையாக கற்களை வீசி தாக்குதல் நடத்தினர் என்றும் தகவல்கள் தெரிவித்து உள்ளன. 

தீவிரவாதிகளை ஒலிப்பெருக்கிகள் மூலம் பாராட்டியது பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்று உளவுத்துறை வட்டார தகவல்கள் தெரிவித்து உள்ளன.

இருப்பினும், இதுபோன்ற ஒலிப்பரப்பை தடுத்து நிறுத்துவதற்காக போலீஸ் மசூதி வளாகத்திற்குள் பிரவேசிக்கவில்லை, கடந்த சில மாதங்களாக பாகிஸ்தான் வழங்கிய அறிவுரையாக இருக்க வாய்ப்பு உள்ளது. மசூதிகளில் ஒலித்த கோஷங்கள் பாகிஸ்தான் வழங்கியிருக்க வாய்ப்பு உள்ளது என்றும் தகவல்கள் தெரிவித்து உள்ளன. பிரிவினைவாதிகளின் தலைமையகமாக விளங்கும் த்ரால் உள்பட புல்வாமா மாவட்டம் முழுவதும் திங்கள் கிழமை அன்று முழு அடைப்பு நடத்தப்பட்டது.

தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவன கட்டிடத்தில் தங்கியிருந்த தீவிரவாதிகளுக்கு தங்களது ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக இது நடத்தப்பட்டு உள்ளது.

ad

ad