புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 பிப்., 2016

மக்களை சிரிக்க வைப்பவர்கள் அழ வேண்டுமென்பதுதான் நியதியோ?


ண்மையில் நடிகர் விவேக்கின் ஒரே மகன் இறந்து போனார். டெங்கு காய்ச்சல் காரணமாக பல நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் மரணமடைந்தது தமிழக மக்களை மிகுந்த துன்பத்திற்குள்ளாக்கியது. 
'சின்னக் கலைவாணர்' என்று தமிழக மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட விவேக்,  தனது ஒரே  மகனை இழந்தது சினிமாத் துறையினருக்கும்,  அவரது நண்பர்களுக்கும் பலத்த சோகத்தை ஏற்படுத்தியது.

 ஃபேஸ்புக் , ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அவருக்கு ஆறுதல் கூறி லட்சக்கணக்கான பதிவுகள். எந்த ஆறுதலும் விவேக்கை
தேற்ற முடியாது என்றாலும், அவர் மீது தமிழக மக்கள் வைத்திருந்த அன்பை வெளிப்படுத்தும் விதமாகத்தான் இதனை எடுத்துக் கொள்ள வேண்டியது இருந்தது. அந்த சோகத் தடம் கூட இன்னும் மாறியிருக்கவில்லை.
இந்நிலையில் சின்னத் திரையை சேர்ந்த மதுரை முத்து தனது மனைவியை விபத்தில் பறிகொடுத்துள்ளார். 

நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க அவர் அமெரிக்கா சென்றிருந்த சமயத்தில், பிள்ளையார் பட்டி கோவிலுக்கு சென்று கொண்டிருந்த அவரது மனைவி வையம்மாள் விபத்தில் சிக்கி பலியாகியுள்ளார். இந்த சம்பவம் மதுரை முத்துவின் உறவினர்கள், நண்பர்கள், அவரது ரசிகர்களுக்கு பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை. இந்த தம்பதிகளுக்கு இரு பெண் குழந்தைகளும் உண்டு.  

தமிழகத்தில் சின்னதிரையை பொறுத்த வரை சன் டி.வி  'அசத்த போவது யாரு ' என்ற நிகழ்ச்சி வெகு பிரபலம். இந்த நிகழ்ச்சியை நடத்தி வந்தது மதுரை முத்துதான். விடாமல் தொடர்ச்சியாக ஜோக்குகளை சொல்லி வயிறு குலுங்க சிரிக்க வைப்பதில் அவருக்கு நிகர் அவரே. இப்படியெல்லாம் கூட ஒருவர் நகைச்சுவை நிகழ்ச்சியை நடத்த முடியுமா? என்று கூட சில சமயங்களில் மதுரை முத்துவை பற்றி குறிப்பிடுவது உண்டு. நகைச்சுவையை சொல்வதில் வித்தியாசமாக அவர் கடைபிடித்த பாணிதான் தமிழகம் முழுவதும் பிரபலமாக்கியது. 

தொலைகாட்சியில் மட்டுமல்ல,  கிராமம் கிராமமாக  சென்றும் தனது நகைச்சுவை நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். எந்த நிகழ்ச்சியில் பங்கேற்றாலும் மதுரை முத்து ,நிகழ்ச்சி அமைப்பாளர்களிடம் பெரியதாக எந்த வேண்டுகோளும் வைப்பதில்லை. உங்களால் முடிந்ததை கொடுங்கள். எனக்கு அந்த வசதி வேண்டும் இந்த வசதி வேண்டுமென்று கேட்டது கிடையாதாம். சில சமயங்களில்,  'கோவில் நிகழ்ச்சிகளில் நீங்கள்தான் பங்ககேற்க வேண்டும். ஆனால் நீங்கள் கேட்கும் தொகையை எங்களால் கொடுக்க முடியாதே' என்று கிராமத்தினர்  சொன்னால் , மறுக்காமல் அந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்று மக்களை மகிழ்வித்தும் வந்தார். 

மக்களை சிரிக்க வைப்பவர்கள் அழ வேண்டும் என்ற நியதியில் இருந்து சார்லி சாப்லினில் இருந்து மதுரை முத்து வரை யாரும் விதிவிலக்கல்ல  போலும்.
இனிமேல் மதுரை முத்துவை யார் சிரிக்க வைக்கப் போகிறார்கள்? காலம் அவருக்கு ஆறுதலை அளிக்கட்டும்!

ad

ad