புதன், ஏப்ரல் 27, 2016

வடமாகாண சபைக்கு எதிராக மனுத்தாக்கல்

வடமாகாண சபைக்கு எதிராக உயர்நீதிமன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உத்தேச அரசியல் அமைப்புச்
சீர்திருத்தம் தொடர்பிலான வடமாகாண சபையின் முன்மொழிவுகளுக்கு எதிராக சட்டத்தரணி அருண லக்சிறி என்பவரால் இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த மனுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இலங்கைத் தமிழரசுக் கட்சி வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோரைப் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர். அரசியல் அமைப்புச் சீர்திருத்தம் தொடர்பிலான வடமாகாண சபையின் முன்மொழிவுகள் தொடர்பில், குறித்த இரு கட்சிகளிடமும், வடமாகாண முதலமைச்சரிடமும் விசாரணை நடத்த வேண்டுமன அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.