புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஏப்., 2016

சுவிஸில் சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களின் பட்டியல் வெளியீடு

சுவிட்சர்லாந்து நாட்டில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினர்கள் எத்தனை பேர் என்ற விவரம் தற்போதைய ஆய்வில் தெரியவந்துள்ளது.

சுவிஸ் குடிவரவு துறை அலுவலகத்தின் ஒப்புதலின் பேரில் ஃபாசல் மாகாணத்தை சேர்ந்த ஆலோசனைக் குழு ஒன்று அண்மையில் ஆய்வு ஒன்றை எடுத்துள்ளது.
இதில், ‘சுவிஸ் நாடு முழுவதும் சுமார் 76,000 வெளிநாட்டினர்கள் சட்டவிரோதமாக தங்கியுள்ளதாக’ தெரியவந்துள்ளது.
மேலும், இந்த எண்ணிக்கையானது மாறுபட வாய்ப்புள்ளதாகவும், உத்தேசமாக நாடு முழுவதும் 50,000 முதல் 90,000 வெளிநாட்டினர்கள் வரை சட்டவிரோதமாக தங்கியிருக்க வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது.
இவர்களில் 43 சதவிகிதத்தினர் தென் அமெரிக்கா நாடுகளை சேர்ந்தவர்கள் என்றும், 24 சதவிகிதத்தினர் ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்காத பிற ஐரோப்பிய நாடுகளை சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.
மாகாண அடிப்படையில் ஆய்வு செய்தபோது, அதிகபட்சமாக சூரிச் மாகாணத்தில் 28,000 நபர்கள், ஜெனிவாவில் 13,000 நபர்கள், வாட் மாகாணத்தில் 12,000, டிசினோவில் 600 வெளிநாட்டினர்கள் சட்டவிரோதமாக தங்கியுள்ளனர்.
இந்த ஆய்வு மூலம், சூரிச் மாகாணத்தில் தான் சட்டவிரோதமாக நுழைந்த வெளிநாட்டினர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன.இதற்கு எதிர்மறையாக, டிசினோவில் சட்டவிரோதமாக நுழைந்தவர்களுக்கு வேலைவாய்ப்புகளில் அதிகளவில் கிடைப்பதில்லை.
சுவிட்சர்லாந்து நாட்டிற்கு சுற்றுலா வந்தபோது மற்றும் அந்நாட்டில் புகலிடம் மறுக்கப்பட்டு தாய்நாடுகளுக்கு திரும்ப முடியாதவர்களே அதிகளவில் தங்கியுள்ளனர்.
இவ்வாறு சட்டவிரோதமாக நுழைந்தவர்களில் 50 சதவிகித வெளிநாட்டினர்கள் சுவிட்சர்லாந்து நாட்டில் வீட்டு வேலைகளில் ஈடுபட்டு வருவதாகவும், எஞ்சியவர்கள் மருத்துவமனை மற்றும் கட்டுமானப்பணிகளில் ஈடுப்பட்டு வருவதாகவும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

ad

ad