புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

27 ஏப்., 2016

லூசேன் நகர உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் "Nila Manikgavasakar" அவர்களிற்கு வாக்களிப்போம் - சுவிஸ் ஈழத்தமிழரவை

சுவிஸ் Luzern நகரத்தின்உள்ளூராட்சி சபைத் தேர்தல் எதிர்வரும்01.05.2016 அன்று நடைபெறவிருக்கிறது.

அத்தேர்தலில் Nila Manikgavasakar எனும் ஈழத்துப்பெண்மணி Luzern- Kriens தமிழ் மக்களின் குரலாகவும்,ஏனைய வெளிநாட்டவர்கள் மற்றும் சுவிஸ் மக்களின் குரலாக தேர்தலில் போட்டியிடுகிறார்.
தமிழினம் இன்று பலராலும் வஞ்சிக்கப்படுகிறது, தமிழீழத்தில் இடம்பெற்ற தமிழினப் படுகொலைஉட்பட புலம்பெயர்ந்த மண்ணில் நாம் சந்திக்கும் அநீதிகளுக்கம், இனக்குரோத அடக்க முறைகளுக்கும் நாம்நீதி பெற்றே ஆகவேண்டும்.
அப்போதுதான் எமது இனம் மற்றும் எதிர்காலச் சந்ததியினர் தாயகத்திலும், புலம்பெயர் சூழலிலும் சுதந்திரமாக வாழமுடியும்.
புலம்பெயர்ந்த மண்ணிலும் நாம் சமூக இணைவாக்கமடைந்து, இந்த நாட்டின் சமூக, பொருளாதார, அரசியல் செயற்பாடுகளில் எம்மை இணைத்து வாழ்வதின் ஊடகவே இங்கும் எமக்கான உரிமைகளை பெற்று வாழ முடியும்.
இவைகள் யாவும் அடையவேனுமாயின் நாம் மிகப்பெரும் அரசியல், அறிவியல் சக்தியாக மாற்றம் பெற வேண்டும். இவற்றை எமது இளைய தலைமுறையினரே அறிவியலாள் சாதித்துக்காட்டும் திறனைப் பெற்றுள்ளனர்.
அந்த வகையில் எமது ஈழத்து இளையோர்கள் இன்று பல நாடுகளில் பலதுறைகளில் எமது தாய்நாட்டின் விடிவிற்காய் குரல் எழுப்பி வருகின்றனர்.
தன்னம்பிக்கையும் தன்னெழுச்சியும் கொண்ட Nila Manikgavasakar எனும் இளைய தலைமுறைபெண், தன்னை அரசியல் பயணத்தில் ஈடுபடுத்தி உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவது, எம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அத்துடன் Nila Manikgavasakar அவர்கள் சுவிஸ் வாழ் தமிழீழமக்களின் சனநாயக அரகசியல் அவையானசுவிஸ் ஈழத்தமிழர் அவைக்கு Luzern வாழ் மக்களால் தெரிவுசெய்யப்பட்டவர் என்பதுடன் கடந்த 6 வருடங்களாக சிறப்பான பணிகளையும் தமிழீழம் நோக்கிச்செயற்படுத்தி வருகிறார்.
தற்பொழுது அவையின் செயலாலராக சேவையாற்றுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் சுவிஸ் வாழ்தமிழ் மக்களாகிய உங்களால் தெரிவுசெய்யப்பட்ட சனநாயக அவையான சுவிஸ் ஈழத்தமிழரவை எதிர்வரும் 01.05.2016 இடம் பெறவிருக்கின்ற Luzern - Kriens உள்ளூராட்சிசபைத்; தேர்தலில் போட்டியிடும் Nila Manikgavasakar அவர்களிற்கு எமது உணர்வுபூர்வமானதும், இதயபூர்வமானதுமான ஆதரவை வழங்கி இருகரம் கொடுத்து வாழ்த்திநிற்கின்றோம்.
அத்துடன்அனைத்து Luzern - Kriens வாழ் தமிழ் பேசும் மக்களையும் Nila Manikgavasakar அவர்களிற்கு வாக்களித்து வெற்றிக்கு வழிவகுக்குமாறு உரிமையுடன் வேண்டிநிற்கிறோம்.
இவ்வண்ணம்
சுவிஸ் ஈழத்தமிழரவை