புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

27 ஏப்., 2016

சாள்ஸ் அன்டனி படைப்பிரிவின் சிறப்பு தளபதி நகுலன் கைது

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சாள்ஸ் அன்டனி படைப் பிரிவின் சிறப்பு தளபதியான நகுலன் என அழைக்கப்படும் கணபதிப்பிள்ளை
சிவமூர்த்தி என்பவர் இன்றைய தினம் காலை நீர்வேலி தெற்கு பகுதியில் உள்ள அவருடைய வீட்டிலிருந்து பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
2009ம் ஆண்டு போர் நிறைவடைந்த பின்னர் காணாமல் போயிருந்த சில தளபதிகளில் இவரும் ஒருவர் என கூறப்பட்டிருந்த நிலையில், நீர்வேலி பகுதியில் கடந்த சில வருடங்களுக்கு முன் இவர் திருமணம் முடித்திருந்தார்.
இந்நிலையில் இன்றைய தினம் காலை 10 மணிக்கு சிவில் உடையில் நீர்வேலி கந்தசாமி கோவிலடி நீர்வேலி தெற்கு என்னும் விலாசத்தில் உள்ள இவருடைய இல்லத்திற்குச் சென்ற பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸார் நகுலன் என்ற முன்னாள் விடுதலைப் புலிகளின் தளபதியை கைது செய்துள்ளனர்.
குறித்த நபர் ஒரு பிள்ளையின் தந்தை எனவும் கூறப்படுகின்றது.