புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

27 ஏப்., 2016

செல்பி எடுத்தபடியே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட புதுமணத் தம்பதி! காரணம் என்ன?

selfie
திருப்பதி தேவஸ்தான விடுதியில் செல்பி வீடியோ எடுத்தபடியே, புதுமணத் தம்பதி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது.
திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான விடுதி ஒன்றில்,கோவையைச் சேர்ந்த புதுமணத் தம்பதி ஒன்று நேற்று அறை எடுத்துள்ளனர்.
இன்று காலை வெகுநேரமாகியும் அவர்களது அறை திறக்கப்படாமல் இருந்ததால், சந்தேகமடைந்த ஊழியர்கள் பொலிசாரின் உதவியோடு அறைக் கதவைத் திறந்துள்ளனர்.
அப்போது, அங்கிருந்த மின்விசிறியின் சுடிதார் துப்பட்டாவினால் அத்தம்பதி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
தற்கொலைக்கு முன்னதாக அவர்கள் இருவரும் செல்பி வீடியோ எடுத்துள்ளனர். பொலிசாரின் முதல் கட்ட விசாரணையில் அவர்கள் கோவையை சேர்ந்த சம்பத்குமார்(25), சத்தியவாணி (25) என்பது தெரியவந்துள்ளது.
தற்கொலை செய்து கொண்ட அவர்கள் உண்மையில் திருமணமான தம்பதிகளா? அல்லது காதலர்களா? அவர்களது தற்கொலைக்கான காரணம் என்ன எனபது குறித்து பல்வேறு கோணங்களில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் அவர்கள் எடுத்துக்கொண்ட வீடியோ பதிவு குறித்தும் விசாரணை அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.