புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

27 ஏப்., 2016

அரசு இணையத்தள முகப்பில் நடிகையின் நிர்வாண படம்: அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் மாநகராட்சியின் இணையதளத்தின் முகப்பு பகுதியில் நடிகை சன்னி லியோனின் நிர்வாண புகைப்படம்
திடீரென தென்பட்டது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மாநகராட்சி இணையதளத்தை பார்த்தவர்கள் அதிகாரிகளுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு புகார் கூறியதால் அதிகாரிகள் தர்மசங்கடத்திற்கு ஆளாகினர்.
அதிகாரிகள் இவ்விவகாரத்தை தொழில்நுட்ப பிரிவிடம் கொண்டு சென்று உள்ளனர். தொழில்நுட்ப பிரிவினர் ஆபாச புகைப்படம் 'ப்ளாஷ்' ஆனதை தற்போது முடக்கியுள்ளனர்.
இந்த பிர்னை இத்துடன் முடிவுக்கு வந்தது என நினைத்த தொழில்நுட்ப துறையினருக்கு அடுத்த தலைவலியும் அந்த நடிகையால்தான் ஏற்பட்டுள்ளது.
முகப்புப் பக்கத்தில் இருந்து நீக்கியதும் இணையதளத்தின் இணைப்பு செல்லும் அனைத்து உள் பக்கங்களிலும் அதே சன்னி லியோன் படங்கள். அதை சரி செய்ய, தொழில்நுட்ப நிபுணர்களுக்கு ஒரு நாள் முழுவதும் தேவைப்பட்டது என கூறப்படுகிறது.
எனினும், இது எப்படி ஏற்பட்டது என்பது குறித்து விசாரித்து டென்சனில் உள்ளார்களாம் மாநகராட்சி அதிகாரிகள். நடிகை சன்னி லியோனின் நிர்வாண புகைப்படம் வெளியான சம்பவமானது அதிகாரிகளுக்கு பெரும்தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது.
இச்சம்பவம் தொடர்பாக இதுவரை பொலிசில் புகார் தெரிவிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. ஆபாசப்படங்களில் நடித்தவர் சன்னி லியோன். தற்போது பாலிவுட் திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழ்,தெலுங்கு உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் குத்துப்பாட்டுக்கு நடனமாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.