புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 செப்., 2016

பதினோரு பரல் கோடா மற்றும் கசிப்புடன் மூவர் கைது

பதினோரு பரல் கோடா  மற்றும்  நாற்பது போத்தல் கசிப்பு  கசிப்பு மற்றும்  கசிப்பு காச்சுவதர்கான  உபகரணங்களுடன் கிளிநொச்சி
மாவட்ட மது ஒழிப்புப் பொலிசாரால்  மூவர் கைது
கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதிப் பொலிஸ்மா அதிபர் எம் வெலிகண்ண என்பவரின் ஆலோசனைக்கு அமைய மாவட்ட  பொலிஸ் மது ஒழிப்புப் பிரிவுக்குக் கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து  மாவட்ட  பொலிஸ் மது ஒழிப்புப் பிரிவு பொறுப்பதிகாரி என் ஜெயவர்த்தன  தலைமையிலான  குழுவினர் நேற்றுக்  காலை  ஒன்பது மணிமுதல் மாலை நான்குமணிவரை  விஸ்வமடு பிரமந்தனாறு குளப்பகுதியில் சோதனையில் ஈடுபட்ட போது குறித்த பகுதியில் நீண்டகாலமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த மூன்று சந்தேகநபர்களையும் அவர்கள் வசமிருந்த பதினோரு பரலில் இருந்த இரண்டாயிரத்து எழுநூற்று ஐம்பத்தெட்டு போத்தல் கோடா ,நாற்பது போத்தல்கசிப்பு மற்றும் கசிப்பு காச்சுவதர்கான  உபகரணங் என்பவற்றினையும் கைபற்றி உள்ளனர்
கைது செய்யப்பட்டவர்களை இன்றையதினம் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில்  ஆயர்ப்படுத்த உள்ளதாக கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் மது ஒழிப்புப் பிரிவு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன

ad

ad