புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 செப்., 2016

வெளியானது ஐபோன் 7… இவை தான் ஐபோன் 7-ன் சிறப்பம்சங்கள்

உலகம் முழுவதும் அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ஆப்பிள் நிறுவனத்தின்
ஐபோன் 7 மற்றும் 7 ப்ளஸ் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில், பில்கிரஹாம் சிவிக் ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
நிகழ்ச்சி தொடங்கியவுடன் ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஓ டிம் குக் கடந்த ஓராண்டில் ஆப்பிள் ஐபோன் சாதித்த விஷயங்களையும், ஆப்பிள் வாட்சின் புதிய பதிப்பான “சீரிஸ் 2”வையும் வெளியிட்டார். பின்பு உலகம் முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆப்பிள் ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ்-ஐ வெளியிட்டார். தொடர்ந்து இந்தாண்டுக்கான ஐபோனை உருவாக்கிய குழுவில் இடம்பெற்ற சாப்ட்வேர் மற்றும் ஹார்ட்வேர் இன்ஜினீயர்களையும், டிஸ்ப்ளே, ஸ்டோரேஜ், பாதுகாப்பு அம்சங்கள், சென்சார்கள், பேட்டரி, கேமரா போன்ற பல்வேறு புதியதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள சிறப்பம்சங்களையும் விளக்கினார்கள். 
அதன்படி ஐபோன் 7, 32 ஜிபி, 128 ஜிபி மற்றும் 256 ஜிபி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் குறைந்தபட்ச மாடலின் விலையாக $649வும், அதிகபட்ச மாடலின் விலை $849 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது இந்திய மதிப்பில் முறையே சுமார் 43 ஆயிரம் மற்றும் 56 ஆயிரமாக இருக்கும். 
இதேபோல் ஐபோன் 7 பிளஸ் மாடலும் 32 ஜிபி, 128 ஜிபி மற்றும் 256 ஜிபி ஆகிய வகைகளில் கிடைக்கிறது. இதன் குறைந்தபட்ச மாடலின் விலையாக $769வும், அதிகபட்ச மாடலின் விலை $969 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது இந்திய மதிப்பில் முறையே சுமார் 51ஆயிரம் மற்றும் 64 ஆயிரமாக இருக்கும் 
ஆப்பிள் ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸின் பல்வேறு சிறப்பம்சங்கள்: 

டிஸ்ப்ளே:
ஐபோன்  7, 4.7” அங்குல ரெட்டினா எச்டி டிஸ்ப்ளேயுடன் 3டி தொடுதிரை கொண்டது. இதன் தடிமன் 7.1 மி.மீ.
ஐபோன் 7 ப்ளஸ் மாடல் 5.5” அங்குல ரெட்டினா எச்டி டிஸ்ப்ளேயுடனும் 3 டி தொடுதிரையுடனும் வெளிவந்துள்ளது. இதன் தடிமன் 7.3 மி.மீ ஆகும்

.
எடை:
ஐபோன் 7 138 கிராம் எடையும் 7 ப்ளஸ் 188 கிராம் எடையும் கொண்டுள்ளது.
பிராசஸர்:
ஐபோன் 7மற்றும் 7 ப்ளஸ் ஆகிய இரண்டும் 4 ஜிபி ரேம் நினைவகத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆப்பிளின் பிரத்யேகமான “A10 பியூசின்”  சிப்கள் முதல் முறையாக இந்த இரண்டு மாடல்களிலும் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் இது 2.4GHz பிராசஸர் கொண்டுள்ளதால் அதிக அளவிலான ஆஃப்களை ஒரே நேரத்தில் பயன்படுத்த முடியும். அதே போன்று இந்த மேம்படுத்தப்பட்ட பிராசஸரின் காரணமாக கடந்த மாடல்களைவிட அதிகளவு சார்ஜ் நிற்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
கேமரா:
ஐபோன் 7 12 MP பின்பக்க கேமராவும் 7 MP HD முன்பக்க கேமராவும் கொண்டுள்ளது. ஐபோன் 7 ப்ளஸ் அதிக தூரத்தில் உள்ளதை படம் பிடிக்கும் வகையில் இரண்டு 12 MP பின்பக்க கேமராவும் 7 MP HD  முன்பக்க செல்ஃபி கேமராவும் கொண்டுள்ளது. கிட்டத்தட்ட டிஎஸ்எல்ஆர் கேமராவிற்கு இணையான புகைப்படங்களை எடுக்கும் வகையில் பல்வேறு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. 
பேட்டரி:
3ஜி நெட்ஒர்க்கில் 7எஸ் மாடலில் 14 மணி நேரமும், 7எஸ் பிளஸ் மாடலில் 21 மணி நேரமும் பயன்படுத்தும் வகையிலான பேட்டரியைக் கொண்டுள்ளது. இரண்டு மாடல்களிலுமே நானோ சிம் கார்டு மட்டுமே பயன்படுத்த இயலும்.
நிறம்:
இந்த இரண்டு போன்களும் சில்வர், கோல்டு, ரோஸ் கோல்டு, பிளாக் மற்றும் ஜெட் பிளாக்  ஆகிய நிறங்களில் கிடைக்கின்றன.
சிறி:
ஆப்பிளின் பிரத்யேகமான சிறப்பம்சங்களில் ஒன்றான அதன் பர்சனல் வாய்ஸ் அசிஸ்டன்ட் சிறி இனி லின்க்டுஇன், பேஸ்புக் மற்றும் மற்ற நிறுவனங்களின் ஆஃப்களிலும் பயன்படுத்த முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  
ஆடியோ:
ஐபோன் 7 மற்றும் 7 பிளஸ்-ல் முதல் முறையாக இரண்டு ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டுள்ளன. முன்னரே எதிர்பார்த்தது போன்று ஹெட் போன் ஜாக் எடுக்கப்பட்டு வயர்லெஸ் ஆடியோவுக்கு முன்னுரிமை அளித்து, அதற்காக ஆப்பிள் புதிதாக வயர்லெஸ் “ஏர்பாட்ஸ்” என்னும் ஹெட் போனையும் அறிமுகப்படுத்தியுள்ளது. 900 மில்லியன் ஏர்பாட்ஸ்களை விற்பனைக்கு கொண்டுவரவுள்ளதாகவும் அறிவித்துள்ளது.
வாட்டர் புரூப் மற்றும் டஸ்ட் ரெஸிஸ்டண்ட்:
இரண்டு புதிய ஐபோன்களும் வாட்டர் ப்ரூப் மற்றும் டஸ்ட் ரெஸிஸ்டண்ட் போன்றவைகளுடன் வெளிவந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad