புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 செப்., 2016

பலவந்த காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்- ஆனந்தி சசிதரன்

லவந்த காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டுமென வட
மாகாணசபையின் உறுப்பினர் ஆனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் இரண்டு வகையீட்டின் அடிப்படையில் காணாமல் போதல்கள் இடம்பெற்றதாகத் தெரிவித்துள்ள அவர், இதில் பலவந்தமான அடிப்படையில் காணாமல் போனவர்கள் தொடர்பில் முன்னுரிமை அளிக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டுமென
வலியுறுத்தியுள்ளார்.
தமது கணவர் உள்ளிட்ட 400க்கும் மேற்பட்டவர்களின் தகவல்கள் அவர்களது மனைவியரினால் படையினரிடம் சாட்சியங்களுடன் வழங்கப்பட்டுள்ளதாகத் கூறியுள்ள அவர்,
பலவந்த காணாமல் போதல்களை யுத்தம் இடம்பெற்ற காலத்திலான சாதாரண காணாமல் போதல்களாக கருதி விசாரணை நடத்தப்படக் கூடாது என வலியுறுத்தி உள்ளார்.
இந்த விடயம் குறித்து ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் பான் கீ மூனிடம் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது எனவும், காணாமல் போனோர் அலுவலகம் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்

ad

ad