புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 செப்., 2016

போலீஸ் முன்னிலையில் வாடகை கார் டிரைவர் தாக்குதல்.. விமான பயணிகள் தவிப்பு.. அதிகாலை முதல் தமிழக எல்கை முற்றுகையால் பரபரப்பு…

கர்நாடகா பந்த் நடத்தும் கன்னட அமைப்புகள் அதிகாலை முதல் தமிழக எல்கையான அத்திபள்ளியில் 100 க்கும் மேற்றபட்ட கன்னட
அமைப்பினர் ஒன்று கூடி போராட்டம் நடத்தி வருகின்றனர். அதனால் தமிழக எல்கையில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு மெஜஸ்டிக் பகுதியில் ஆட்களை ஏற்றி சென்ற வாடகை கார் ஒன்றை வழிமறித்த போராட்டகாரர்கள் போலீஸார் முன்னிலையில் டிரைவரை சராமரியாக தாக்குதல் நடத்தினர்.
போலீஸ் முன்னிலையிலே கன்னட அமைப்பினர் தாக்குதல் நடத்தியதை பார்த்த பயணிகள் அதிர்ச்சியில் உரைந்தனர்.
ஏர்போர்ட் செல்லும் கார் டிரைவர்கள் பந்த் ஆதரவு தெரிவித்து கார்கள் இயக்கபடவில்லை இதன்காரணமாக இன்று பயணம் செய்ய இருந்த பயணிகள் ஏர்போர்ட் செல்ல வழியின்றி தங்கள் பயணத்தை தவிர்த்தனர்.
பெங்களூரு ஏர்போர்டில் நள்ளிரவு முதல் கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்திவருகின்றனர்.  மாநிலம் முழுவதும் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.

ad

ad