புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 செப்., 2016

போதையில் தள்ளாடும் இலங்கை...

உடலை வருத்தி உழைப்பதில் பலருக்கு இப்பொழுது நம்பிக்கை தொலைந்து வருகின்றது போலும். ஒரு நாள் ஆட்டங்களில் உள்ள விறுவிறுப்பும் சுரண்டி உடன் பணம் எடுக்கும் அதிஸ்ட இலாபச் சீட்டுக்களில் உள்ள வருவாயும் இன்றைய யுகத்தில் பலருக்கு பிடித்தமானதொன்றாக மாறியிருக்கின்றது. காத்திருப்புகளில் நம்பிக்கை ஆட்டங்கண்டிருக்கின்றது.

இதன் எதிரொலியாக பெருந்தொகையானவர்களுக்கு தொற்றியிருக்கின்றது. வேகமாகப் பணஞ் சம்பாதிக்கும் பேராசை. ஒரு நாள் ஆட்ட வெற்றி போல இசீட்டை சுரண்டிய அடுத்த கணம்  நூறோ ஐநூறோ சம்பாதிப்பது போல ஒரே நாளில் பெரும் பணம் கைபுரள வேண்டும் என்ற வெறியில் எதையெதையோ எல்லாம் செய்யத் தலைப்பட்டிருக்கின்றது இன்றைய சமுதாயம்.

இதில் முதன்மை பெறுகின்றது கடத்தல் சமாச்சாரம்...
ஆட்களைக் கடத்துகிறார்கள்,தங்கத்தைக்கடத்துகிறார்கள், அரிய பல பொருட்க ளைக் கடத்துகிறாகள்,போதைவஸ்தையும் கடத்துகிறார்கள்.
சர்வதேசரீதியாகப் பார்த்தால் கடத்தலில் முதன்மை பெறுவது போதைவஸ்து வேதான்.

போதைவஸ்துகளைக் கடத்துபவர்களின் தனி சாம்ராஜ்யம் பற்றி பக்கம் பக்க மாக எழுதிக் கொண்டே போகலாம். இந்த மாபியாக் கும்பல் பற்றி பல திரை ப்படங்கள் எடுக்கப்பட்டு நாவல்கள் பலவும் எழுதப்பட்டு விட்டன.

அது ஒரு ஒரு புறமிருக்க நாங்கள் இப்பொழுது தொடும் விடயம் இலங்கையில் காட்டுத்தீயாகப் பரவும் இன்றைய போதைவஸ்து கடத்தல் பற்றியேதான்...

தென்அமெரிக்க நாடுகளிலிருந்து வட அமெரிக்காவிற்கு போதைவஸ்துக்களை அனுப்ப மெக்ஸிக்கோ எப்படி ஒரு நுழைவாயிலாகப் பயன்படுகின்றதோ அப்படி இந்தியாவிலிருந்து குறிப்பாக கேரளக் கஞ்சா இலங்கை வந்தடைய யாழ்ப்பா   ணக் கரையோரப் பகுதியை குறிவைத்துள்ளார்கள் கடத்தல் மன்னர்கள்.

முன்பெல்லாம் இந்தியாவிலிருந்து கட்டுமரங்களில் சங்கு மார்க் சாரங்களைக் கடத்தி வருவதுபோல கஞ்சாவை கேரள மண்ணிலிருந்து கடத்தும் தொழில் வடபகுதியில் சூடு பிடித்துள்ளது.

தினமும் பத்திரிகைகளை கஞ்சா கைப்பற்றும் செய்திகள் அலங்கரிப்பது தினசரிச் செய்திகளாகி இருக்கின்றன.பொலிஸார் எடுத்துள்ள புள்ளி விபரங்க ளின்படி இந்த வருடம் முதல் ஆறு மாதங்களில் 19000 பேர் போதைவஸ்து வைத்தி ருந்த சந்தேகத்தின் பேரில் கைதாகி இருக்கிறார்கள்.

நூறல்ல ஆயிரமல்ல பத்தொன்பதாயிரம்...அதுவும் இது பாதி வருடக் கணக்கு. இதை வாசிக்கும்போது வடபகுதியினர் முழுவதும் போதைவஸ்தை உட்கொண்டு கெட்டழிந்து போய்வருகிறார்களோ என்ற மனப்பிரம்மையே பலருக்கு ஏற்படும்.
ஆனால் உண்மை அதுவல்ல. கடத்தப்பட்டு பொலிஸாரின் கையில் சிக்காதவை இரவோடு இரவாக வேறு இடம் பறந்துவிடும். பல கோடிகளையும் அதற்குள் சம்ப ந்தப்பட்டவர்கள் உழைத்திருப்பார்கள். ஆனால் இன்று வெளியார் பார்வைக்கு வடபகுதி மக்கள் போதையில் சிக்குண்டு தள்ளாடுவது போன்ற ஒரு பிம்பமே சித்தரிக்கப்பட்டு வருகின்றது. 

பனையின் கீழிருந்து பால் அருந்தியவன் பாலைக் குடிக்கலாம். ஐயய்யோ இது கள் இல்லை என்று சத்தியம்  செய்யலாம். ஆனால் அவனை நம்ப யார் தயாராக இருக்கிறார்கள்? 

அதற்காக வடபகுதி போதைவஸ்து பாவனை அடியோடு இல்லாத பிரதேசம் என்று முத்திரை குத்துவதற்கும் இல்லை. வடபகுதியே போதைவஸ்து பாவனை யாளர்களால் நிறைந்து போயுள்ளது என்ற பிம்பந்தான் பிழை... 

வடக்கு ஒரு பக்கம் இருக்கட்டும்  ஏனைய இடங்களில் என்னதான் நடக்கின்றது? இலங்கை முழுவதும் கடத்தல்கள் எந்த அளவில் சம்பவிக்கின்றன?

பொலிஸ் பேச்சாளர் இதுபற்றிக் குறிப்பிடுகையில் பொலிஸ் போதைவஸ்து தடுப்புப் பிரிவினரும் விஷேச பணிப் பிரிவினரும் பொலிஸ் நிலையங்களின் உதவியுடன் இலங்கையெங்கும் 19057 பேரை இந்த வருடத்தின் ஆறு மாதங்களில் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

12கிலோ 265 கிராம் எடைகொண்ட ஹெரோயின் 51,451கிலோ கிராம் எடை கொண்ட கனாபிஸ் 4கிலோ 44 கிராம் கொக்கெயின் போன்றன கைப்பற்றப்ப ட்டுள்ளன என்றும் கூறும் இவர் இதன் சந்தை மதிப்பு பல நூறு கோடி ரூபாய்கள் பெறுமதியானவை என்றும் கடத்தலில் சம்பந்தப்பட்ட வெளிநாட்டவர்கள் தொகை அதிகரித்திருப்பதாகவும் இவர் சீன செய்தி நிறுவன மொன்று க்கு  பேட்டியளித்துள்ளார்.  

கடந்த வருடம்  கடத்தப்பட்ட தொகையை விட கணிசமான அளவு அதிகரிப்பை இந்த வருடத்தின்  முதல் ஆறு மாதங்கள் கண்டுவிட்டன.  
ஒரு கிராம் கொக்கெயினின் தற்போதைய சந்தை மதிப்பு 150 டொலராக இருப்பதால் கடத்தல்காரர்களுக்கு இந்தக் கடத்தல் கவர்ச்சிகரமான ஒன்றாக மாறியுள்ளது. அதாவது சந்தைவிலை தங்கவிலை போல கிடுகிடுவென ஏறியி ருக்கின்றது.

இந்தவருடம் எப்ரல் மாதம் இரண்டு தாய்லாந்துப் பெண்கள் சுங்க அதி காரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள். 160 சிறிய மாத்திரைகளுக்குள் 1489 கிராம் கொக்கெயினை நிரப்பி அதை இருவருமாக விழுங்கி விட்டு வந்துள்ளார்கள்

இவர்கள் முயற்சி விழலுக்கு இறைத்த நீராகி விட்டது. அதிகாரிகளிடம் பிடிபட்டு விட்டார்கள்.

இன்னும் இரு பிரித்தானியர்கள் இரண்டு சஞ்சிகைகளுக்குள் போதைவஸ்தை வைத்து அவற்றை தென்இந்தியாவிலிருந்து தபாலில் அனுப்பியிருக்கின்றார்கள். ஒருவர் புத்தகப் பார்சலை மத்திய பொதிகள் விநியோகப் பிரிவில்  எடுக்கச் சென்றபோது மாட்டிக் கொண்டார். அவருடைய கூட்டாளி சில தினங்கள் கழித்து சட்டத்தின் பிடியில் அகப்பட்டார். 

மூன்று தசாப்த கால யுத்த முடிவில் இலங்கை உல்லாசப் பயணத்துறையின் வருமானம் வருடத்திற்கு 30 வீதம் என்ற கணக்கில் அதிகரிக்கலாயிற்று. 2012இல் தங்கள் குறி ஒரு மில்லியன் பயணிகள் வருகையாக இருக்க வேண்டும் என்று அதிகாரிகள் கணக்கிட்டார்கள்.

ஆனால் உல்லாசப் பயணிகள் தொகை அதிகரித்தாலும் ஒரு விலை கொடுத்தே அரசு இந்தக் குறியைத் தொட்டிருக்கின்றது. 

இந்தக் கடத்தல்களுடன் இலங்கை,தாய்லாந்து,நைஜீரியா போன்ற நாடுகளு டன் பெரு, பிரேசில் போன்ற இலத்தீன் அமெரிக்க நாடுகளும் தொடர்புபட்டிருப்பது இந்தக் கடத்தல்களின் சர்வதேசப் பின்னணியை நமக்கு துல்லியமாக எடு த்துக்காட்டுகின்றது. 

ஓர் அறிக்கையின் பிரகாரம் போதைவஸ்து கடத்தலுக்காக கடந்த ஐந்து வருடங்களில் 25 பாகிஸ்தானியர்கள், 4 இந்தியர்கள், ஆறு மாலைதீவினர், ஐந்து ஈரானியர்கள்; கைதாகி உள்ளார்கள்.

நம்பிக்கையான வட்டாரங்கள் மூலம் சுமாராக 30 கிராம் எடையுடைய மாத்தி ரைகள் மாதாந்தம் விமானப் பயணிகளாக வரும் விஐபிகளால் கடத்தி வரப்படுகின்றன என்று தெரியவந்துள்ளதாக விமானநிலைய சுங்க அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.

இந்த மாத்திரைகள் பின்பு ஐந்து நட்சத்திர ஹோட்டல்களிலுள்ள இரவு விடுதி களில்   விற்கப்படுகின்றன என்ற தகவலும் கசிந்துள்ளது. 

இலங்கையில் சமீபத்தில் களனியில் கைப்பற்றிய  பெருந்தொகை ஹெரோ யின்தான் இலங்கைக் கடத்தல் சரிதத்தில் மிகப்பெரிய கடத்தல் தொகை என்கிறார்கள். இதனுடைய சந்தை மதிப்பு சுமாராக 683 மில்லியன் ரூபாய்கள். இதில் சம்பந்தப்பட்டவர்கள் இரு சகோதரர்கள்.

வேலியே பயிரை மேய்ந்தால்பயிரின் நிலைதான் என்ன?  பயிர்  யாரிடம் போய் முறையிட முடியும்?

காவல் பூனைகள் உஷாராக இருந்தால் கடத்தல்கள் தானாக ஒழியும்.
ஆனால் என்றுவரும் அந்தப் பொற்காலம்?

ad

ad