www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

புதன், ஏப்ரல் 26, 2017

தினகரனுக்கு 7 நாள் போலீஸ் காவல்!


டிடிவி.தினகரனுக்கு 7 நாள் போலீஸ் காவல் வழங்கி உத்தரவிட்டது டெல்லி திஸ் ஹசாரி நீதிமன்றம்.

முல்லைத்தீவைச் சேர்ந்த இருவர் ஈரான் எல்லையைக் கடக்க முயன்ற போது சுடப்பட்டு மரணம்!

ஐரோப்பாவுக்கு சட்டவிரோதமாகச் சென்ற முல்லைத்தீவைச் சேர்ந்த இரு இளைஞர்கள் ஈரானில், சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு செம்மலை மற்றும் உடுப்புக்குளம் பிரதேசத்தை சேர்ந்த இளைஞர்கள் இருவர் கடந்த வருடம் டிசம்பர் மாதம் லண்டனில் உள்ள

நாங்கள் எல்லோரும் அண்ணன் தம்பிகள்தான்: ஓ.பி.எஸ். அணி பேட்டி





சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் புதன்கிழமை காலை அவரது அணியைச் சேர்ந்த முன்னாள்
அதிமுக தலைமை அலுவலகத்தில் சசிகலா பேனர்கள் அகற்றம்





''இரு அணிகள் இடையே பேசிக்கொண்டிருக்கிறோம், பேச்சுவார்த்தைக்கான சுமூக சூழல் உருவாகியிருக்கிறது’’ என ஓ.பி.எஸ் நேற்று தெரிவித்திருந்த நிலையில் இன்று காலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த சசிகலா பேனர்கள்  அகற்றப்பட்டுள்ளது.

முன்னதாக அதிமுக தலைமை கழகத்தில் இருந்து சசிகலா படத்தை உடனே அகற்ற வேண்டும் என ஓ.பி.எஸ் அணி சார்பாக மதுசூதனன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் இதனை தெரிவித்திருந்தார்.


அந்த அறிக்கையில், “சசிகலாவின் புகைப்படங்களை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அலுவலகமான தலைமைக் கழகத்திலிருந்து உடனே அகற்றி அதன் புனிதத்தை காப்பாற்ற வேண்டும் என்று விசுவாசத் தொண்டர்களின் சார்பாகவும், தமிழக மக்களின் சார்பாகவும் கேட்டுக் கொள்கிறேன்” என்று அந்த அறிக்கையில் வலியுறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.