நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்பது சுயநிர்ணய உரிமை, ஜனநாயகம், மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையிலான அரசியல் உருவாக்கம் ஆகும். அதன் உறுப்பினர்கள் தேர்தல் செயல்முறை மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை மற்றும் 2009 ஆம் ஆண்டு தமிழ் ஈழ நடைமுறை அரசு அழிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இது 2010 இல் நிறுவப்பட்டது. உலகெங்கிலும் இருந்து நாடுகடந்த தமிழீழ அரசின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அதன் ஆலோசனைக் குழு, நெறிமுறைகள் ஆணையம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் உறுப்பினர்களுடன், மே 17 முதல் 19 ஆம் தேதி வரை நியூயார்க் நகரில் நான்காவது பாராளுமன்றத்தின் தொடக்கக் கூட்டத்தில் பங்குபற்றுகிறார்கள். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் முதலில், சத்தியப்பிரமாணம் செய்வர் ,அதன் பின்னர் நா க த அரசாங்கத்தின் சபாநாயகர், மற்றும் துணை சபாநாயகரைத் தேர்ந்தெடுப்பார்கள். இதன் பின்னர் பிரதமரை தேர்ந்தெடுக்க சபாநாயகர் உறுப்பினர்களை அழைப்பார். இதன் பின்னர் பிரதமர் தெரிவு நடைபெறும், தொடக்க பாராளுமன்ற அமர்வின் ஒன்றுகூடலில் பின்வரும் கருப்பொருளில், "நீதி, பொது வாக்கெடுப்பு முதல் சர்வதேச நீதி, வரையிலான தலைப்புகளில் பல முக்கியஸ்தர்கள் சொற்பொழிவு வாற்றுவார்கள். மொன்றியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் டானியல் டூரிப், "தமிழ் ஈழம் - கியூபெக்கில் 1980 மற்றும் 1995 சுதந்திர வாக்கெடுப்புகளில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்கள்" என்ற தலைப்பில் பேசுவார். துருக்கிய பாராளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினரும், சர்வதேச மனித உரிமை ஆர்வலருமான திரு. கரோ பெய்லன், "தண்டிக்கப்படாத ஆர்மேனிய இனப்படுகொலை, புதிய இனப்படுகொலைகளுக்கு வழிவகுத்தது" என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றுவார். தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம், மற்றும் அதில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பங்கு குறித்தும் பேசப்படும். மலேசியாவின் பினாங்கு மாநில முன்னாள் துணை முதல்வர், பேராசிரியர் இராமசாமி அவர்களின் விசேட உரையும் இடம்பெறும். முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையின் 10வது வருடாந்த நினைவேந்தல் விரிவுரையை ஐக்கிய நாடுகள் செயலகத்தின் முன்னாள் சிரேஷ்ட ஆலோசகரும், அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் முன்னாள் சிரேஷ்ட ஆலோசகருமான, பேராசிரியர் டேவிட் பிலிப்ஸ் மே 18ஆம் திகதி ஆற்றவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. |