ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவினர் தற்போதைக்கு, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு விஜயம் செய்துள்ளனர். இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி யாழ் போதனா வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டடம் ஒன்றை திறந்து வைக்கவுள்ளார். கிளிநொச்சியில் வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டடம் ஒன்றையும் அவர் திறந்து வைக்கவுள்ளார். மேலும், வலி வடக்கு பகுதியில் ஒட்டகப்புலத்துக்குச் செல்லும் பிரதான பாதையினையும் உத்தியோபூர்வமாக மக்களிடம் கையளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது |