அமெரிக்க பிரதிநிதிகள் சபை பிரதிநிதி விலே நிக்கெல் இந்த தீர்மானத்தை சமர்ப்பித்துள்ளார். அமெரிக்க காங்கிரஸில் இவ்வாறான தீர்மானம் சமர்ப்பிக்கப்படுவது இது முதல்தடவை என்பது குறிப்பிடத்தக்கது. ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவளிப்பதன் மூலம் நிரந்தர சமாதானத்திற்காக சுதந்திரத்திற்கான சர்வஜன வாக்கெடுப்பிற்கு ஆதரவளிப்பதன் மூலம் தமிழர்கள் இனப்படுகொலை உட்பட வன்முறைகள மீள நிகழாமையை உறுதி செய்யவேண்டும் என தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |