எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் கொன்சர்வேட்டிவ் கட்சி சார்பாக மார்க்கம் தோர்ன்ஹில் தொகுதியில் லியோனல் லோகநாதன் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வார விடுமுறையில் நடைபெற்ற இந்த தொகுதியின் வேட்பாளர் நியமனத் தேர்தலில் லியோனல் லோகநாதன் வெற்றிபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் இரண்டாவது பெரிய மக்கள் தொகையாக தமிழர்கள் இருந்து வருகின்றனர். இந்நிலையில், பொதுத் தேர்தலில் கொன்சர்வேட்டிவ் கட்சியின் சார்பில் மூவர் வேட்பாளராகும் சாத்தியம் இருப்பதாக கூறப்படுகின்றது. இவர்களில் ஒருவர் தெரிவுசெய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் இரு வேட்பாளர்கள் நியமனத் தேர்தலில் தெரிவு செய்யப்பட இருப்பதாகவும் கூறப்படுகின்றது. இந்நிலையில், இவர்களுக்கான நியமனத் தேர்தல் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை,மார்க்கம் தோர்ன்ஹில் தொகுதியை அமைச்சர் Mary Ng, 2019ஆம் ஆண்டு முதல் பிரதிநிதித்துவ படுத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. |