புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 நவ., 2018

அக்காச்சியும் தனித்து எதிர்கொள்வாராம்?

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமது கட்சி சுயேட்சையாக களமிறங்கும் என ஈழத் தமிழர் சுயாட்சிக கழகத்தின் செயலாளர் நாயகமும் முன்னாள் வடமாகாண அமைச்சருமாக அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு குழப்பங்களையடுத்து தான் மஹிந்த அரசினால் பழிவாங்கப்படலாமென்ற அச்சத்தில் முடங்கியிருந்த அவர் தற்போது நாடாளுமன்ற கலைப்பின் பின்னர் மீண்டும் வெளியே வந்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவர் தேசிய தலைவர் , தமிழ் செல்வன், எழிலன் போன்றவர்களை அரசியலுக்கு இனங்காட்டி இருக்கிறார். அப்படிபட்ட போராளிகளை(?) எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் களமிறக்க வேண்டும். சகல தரப்பில் இருந்தும் சாதாரண கூலித் தொழிலாளி முதல் அனைவரும் பாராளுமன்றத்தை பிரதிநித்துப்படுத்த வேண்டும். அப்படிப்பட்டவர்களைத் தான் எமது கட்சி இனங்கண்டுள்ளது. இப்போது இருக்கும் தமிழ் தலைமைகளும் புதிய இளம் தலைமைகளுக்கு இடம்விட்டு, தேர்தலுக்கு முகம் கொடுக்க வேண்டும். அதன் மூலம் தான் ஐ.நா தீர்மானம் போன்றவற்றை நிறைவேற்ற வழிவகுக்கும்.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை எமது கட்சி சுயேட்சையாக எதிர்த்து களமிறங்குமென தெரிவித்துள்ளார்.

எனினும் அவசர அவசரமான அவரது அறிவிப்பு முதலமைச்சர் கூட்டணியில் தனக்கு துண்டுவிரிக்கும் உத்தியாக இருக்கலாமென அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

ad

ad