புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 நவ., 2018

ஜனாதிபதி வெறுப்பூட்டும் வகையில் செயற்பட்டுள்ளார்

ஜனாதிபதி வெறுப்பூட்டும் வகையில் செயற்பட்டுள்ளார்நாடாளுமன்றம் அதன் உரிய நிர்வாக காலத்திற்கு முன்னதாக கலைக்கப்பட்டமையை ரத்து செய்யுமாறு கோரி எதிர்தரப்பினர் நீதிமன்றத்தில் 14 மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இந்தநிலையில், விசாரணையில் கலந்து கொண்ட சட்டத்தரணிகள் மாறுபட்ட கருத்துகளை வௌியிட்டுள்ளனர்.

இதுதொடர்பில் கருத்து வௌியிட்டு ஆளும்தரப்பு சார்பில் முன்னிலையான சட்டத்தரணி இவ்வாறு கருத்து தெரிவித்தார். “உயர்நீதிமன்றம் அந்த மனுவை கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளது. நாங்கள் நினைக்கிறோம் நிறைவேற்று ஜனாதிபதி என்ற வகையில் ஜனாதிபதி எடுத்த தீர்மானம் சரியானது என நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் என்று நம்பிக்கை இருக்கிறது.”

அதேவேளை, எதிர்கட்சியின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணியொருவர் ஜனாதிபதியின் தீர்மானத்தை இவ்வாறு விமர்சித்தார்.

“இந்த நாட்டில் சட்டம் ஒருபுறம் ஒதுக்கிவைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அரசியலமைப்பு நான்காக உடைக்கப்பட்டு, நெறிமுறைகள் பாதையில் வீசியெறிப்பட்டு பணியாற்றும் ஒரு யுகம்தான் தற்போது ஏற்பட்டுள்ளது.

நான் இதுபற்றி மிகவும் வருத்தமடைகிறேன். நான் எனது உயிரையும் பணயமாக வைத்து ஜனாதிபதிக்காக பணியாற்றிய போதும், அவர் வெறுப்பூட்டும் வகையில் செயற்பட்டுள்ளார்.” என்று கூறினார்

ad

ad