புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

12 நவ., 2018

சம்பந்தன் செல்வம் அடைக்கலநாதன் விஷேட வாகனங்கள் மற்றும் அரச சொத்துக்களை மீள ஒப்படைக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது

சம்பந்தன் செல்வம் அடைக்கலநாதன் விஷேட வாகனங்கள் மற்றும் அரச சொத்துக்களை மீள ஒப்படைக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது

அரச வாகனங்கள், சொத்துக்களை பயன்படுத்துபவர்களுக்கு எதிராக கடும் சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

நேற்று ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி, பிரதமர், புதிய அமைச்சரவையின் உறுப்பினர்களைத் தவிர முன்னாள் பிரதி, இராஜாங்க அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர், குழுக்களின் பிரதித் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என எந்தவொரு நபரும் அரச வாகனங்கள் மற்றும் அரச சொத்துக்களைப் பயன்படுத்துவது தேர்தல் சட்டத்தின் கீழ் முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னாள் அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் தம் வசம் உள்ள அனைத்து அரச வாகனங்கள், சொத்துக்களை உரிய அமைச்சுக்களின் செயலாளர்களிடம் ஒப்படைக்குமாறு, கௌரவமாக கோரிக்கை விடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு ஒப்படைக்க தாமதமாகினால் பொலிஸாரைப் பயன்படுத்தி சட்டத்தை நடைமுறைப்படுத்தி குறித்த வாகனங்கள் சொத்துக்களை மீளப் பெறுவதுடன், வாகனங்களை கையளிக்காதவர் எவறாயினும் அவருக்கெதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இதன்மூலம் தமிழர்களின் வாக்குகளைப் பெற்றுவிட்டு ஏகபோக சுகபோக வாழ்வை அனுபவித்துவந்த எதிர்கட்சித்தலைவர் சம்பந்தன் மற்றும் குழுக்களின் பிரதித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்ட விஷேட வாகனங்கள் மற்றும் அரச சொத்துக்களை மீள ஒப்படைக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது