www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

சனி, ஏப்ரல் 14, 2018

28 ஆண்டுகள் யேர்மனியில் தமிழ் வளர்த்த பெருமையுடன் அகவை நிறைவு விழாவுக்குள் நுழையும் தமிழாலயங்கள்!

28 ஆண்டுகள் யேர்மனியில் தமிழ் வளர்த்த பெருமையுடன் அகவை நிறைவு விழாவுக்குள் நுழையும் தமிழாலயங்கள்!

யேர்மனியில் வாழும் தமிழ்ப் பிள்ளைகளுக்கு நாடு முழுவதிலும் 120 க்கு மேற்பட்ட தமிழாலயங்களை அமைத்துக் கடந்த 28 ஆண்டுகளும் தமிழ்மொழி, தமிழ்ப் பண்பாடு மற்றும் மெய்வல்லுனர் விளையாட்டுக்களைக் கற்பித்து வரும் தமிழ்க் கல்விக் கழகம் தனது 28 வது அகவை நிறைவு விழாவை 07.04.2018 சனிக்கிழமை தென்மாநிலத்தில் ஸ்ருட்காட் நகரில் ஆரம்பித்துள்ளது. இவ் விழா தொடர்ந்து வரும் 08.04 , 14.04 , 21.04 மற்றும் 22.04.2018 ஆகிய நான்கு நாட்களும் ஏனைய நான்கு மாநிலங்களிலும் நடைபெறவுள்ளது.

ஒவ்வொரு அரங்குகளிலும் நாடு தழுவிய மட்டத்தில் தமிழ்மொழி, தமிழ்த்திறன், கலைத்திறன் போன்றவற்றில் முதல் மூன்று நிலையைப் பெற்ற மாணவர்களுக்கு விசேடமான மதிப்பளிப்புக்கள் நடைபெறுகின்றன.

120 தமிழாலயங்களிலும் ஊதியமின்றித் தன்னலமற்ற தூயபணியாற்றும் 1300 க்கு மேற்பட்ட ஆசிரியர்களில் 5, 10, 15 வருடங்கள் தொடர்ச்சியாக ஆசிரியப் பணியாற்றியவர்களுக்கு சிறப்பு மதிப்பளிப்பு நடைபெறுவதுடன் 20 ஆண்டுகள் ஆசிரியப் பணியாற்றியவர்களுக்கு தமிழ்வாரிதி என்ற சிறப்புப் பட்டமும் 25 ஆண்டுகள் ஆசிரியப் பணியாற்றியவர்களுக்கு தமிழ்மாணி என்ற சிறப்புப் பட்டமும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் 12 ஆம் வகுப்பை நிறைவுசெய்து தமிழாலயத்தை விட்டு வெளியேறும் மாணவர்களுக்கு விசேடமான பட்டமளிப்பு கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றது. அந்தவகையில் 2017 இல் 12 ஆம் ஆண்டில் தேர்வெழுதிச் சித்தியடைந்த 217 மாணவர்களைத் தாயகத்திலிருந்து விழாவுக்குப் பிரதம விருந்தினர்களாக வருகை தந்திருந்த பேராசிரியர் திரு. அருணாசலம் சண்முகதாஸ் அவர்களும் அவரின் துணைவியார் முனைவர் மனோன்மணி சண்முகதாஸ் அவர்களும் சான்றிதழ் வழங்கி மதிப்பளித்தனர்.

தமிழாலயங்களில் 12 ஆம் ஆண்டுவரை மொழிபயின்று வெளியேறும் மாணவர்களில் 350 க்குமேற்பட்டபிள்ளைகள் மீண்டும் தமிழாலயங்களில் இணைந்து ஆசிரியர்களாகப் பணியாற்றுவது போற்றுதலுக்குரிய விடயமாகும். அப்படியான இளைய ஆசிரியர்களின் மொழியறிவை மேம்படுத்தும் நோக்கில் தமிழ்க் கல்விக் கழகம் 2016ஆண்டில் பட்டயக் கற்கைநெறி என்ற புதியநூலை உருவாக்கி வெளிவாரிக்கற்றல் முறையினூடாக அத்திட்டத்தை நடைமுறைப் படுத்தி வருகின்றது. அந்த வகையில் இவ்வாண்டு பட்டையக் கற்கைநெறியில் பங்கேற்றுச் சித்தியடைந்தவர்களுக்கு பேராசிரியர்களால் பட்டமளிப்பு நிகழ்வும் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

வரும் வாரங்களில்பிராங்போர்ட் ,பீலபெல்ட்,புறூல்,மற்றும் கற்றிங்கன் போன்ற நகரங்களில் விழா நடைபெறவுள்ளதும் அவ் விழாக்களில் பல்லாயிரம் பெற்றோர்களும்,மாணவர்களும் அவர்களின் ஆசிரியர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளதும் தமிழ்க் கல்விக் கழகத்தின் நிமிர்வின் உயர்வுக்குச் சான்றாகும்

கடந்த 28 ஆண்டுகளில் தமிழாலயங்களில் மொழியும்,பண்பாடுகளையும் பயின்ற பலமாணவர்கள் இன்று யேர்மனியில் உயர் கல்வியை நிறைவு செய்து அங்கே விமான ஓட்டியாகவும், நீதிபதியாகவும், வைத்தியராகவும், விஞ்ஞானியாகவும், வியாபாரியாகவும், அரசியல் வாதியாகவும் உயர்ந்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தாயகத்தின் மேல் பற்றுள்ளவர்களாகவும் வாழும் நாட்டவர்களுக்கு நன்றியுள்ளவர்களாகவும் அவர்கள் யேர்மனியின் பொருளாதாரத்தின் அச்சாணியாக இயங்குகின்றனர்.

அவர்கள் நாம் இருக்கும் நிலைகளையும் வாய்ப்புக்களையும் பயன்படுத்தி தமிழீழத்தின் விடிவுக்காக தாம் இருக்கும் இடங்களில் குரல் கொடுக்கின்றனர். அவற்றை நோக்கும்போது எமது தமிழ் ஆசான்களின் அற்புதமான தமிழ்ப்பணிக்குக் கிடைக்கும் காணிக்கை என்பதில் ஐயமில்லை.

தமிழாலயங்களில் 1990 களின் ஆரம்பத்தில் இணைத்த பல மாணவர்கள் இன்று தமது பிள்ளைகளுடன் தமிழாலயங்களின் கதவுகளை மீண்டும் தட்டுகின்றார்கள். பேரன் பேத்தி கண்ட பெருமையுடன் தொடர்கின்றது யேர்மனியில் தமிழ்ப்பணி….

முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | சினிமா | படத்தொகுப்பு | தொடர்ப வலி.வடக்கில் விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பிரதேசத்தில் 3 இராணுவ முகாம்கள்!

முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | சினிமா | படத்தொகுப்பு | தொடர்ப
வலி.வடக்கில் விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பிரதேசத்தில் 3 இராணுவ முகாம்கள்!

வலி. வடக்­கில் இரா­ணு­வ பிடி­யில் இருந்து நேற்று விடு­விக்­கப்­பட்ட பிர­தே­சத்­துக்­குள் 3 இரா­ணுவ முகாம்­கள்

ஆலய வழிபாட்டில் ஈடுபட்டவர்கள் மீது மோதியது கார்! - ஆறு பேர் காயம்

ஆலய வழிபாட்டில் ஈடுபட்டவர்கள் மீது மோதியது கார்! - ஆறு பேர் காயம்

வடமராட்சி- தொண்டைமானாறு, அரசடிப் பகுதியில் இன்று நடந்த விபத்தில் 6 பேர் காயமடைந்து

புதுக்குடியிருப்பில் பொலிஸ் துரத்தியதால் குளத்தில் குதித்த குடும்பஸ்தர் மரணம்!

புதுக்குடியிருப்பில் பொலிஸ் துரத்தியதால் குளத்தில் குதித்த குடும்பஸ்தர் மரணம்!

முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு இடைக்கட்டுகுளத்தில் பொலிசார் துரத்திச் சென்ற போது குளத்தில் குதித்த

ஜனாதிபதியின் இல்லத்தில் புத்தாண்டு கொண்டாட்டம்! - சம்பந்தனும் பங்கேற்றார்

ஜனாதிபதியின் இல்லத்தில் புத்தாண்டு கொண்டாட்டம்! - சம்பந்தனும் பங்கேற்றார்

கொழும்பில் உள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சிங்கள, தமிழ் புத்தாண்டு பாரம்பரிய

இலங்கைப் பெண்ணுக்கு பல மில்லியன் பவுண்ட் நட்டஈடு! - பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு

இலங்கைப் பெண்ணுக்கு பல மில்லியன் பவுண்ட் நட்டஈடு! - பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு

தாதியரின் கவனக் குறைவு காரணமாக இலங்கை அகதி தம்பதியினரின் குழந்தை ஒன்றுக்கு ஏற்பட்ட அநீதிக்கு நஷ்டஈடாக

24 மணிநேரத்தில் 7 பேர் பலி, 197 பேர் காயம்!

24 மணிநேரத்தில் 7 பேர் பலி, 197 பேர் காயம்!

கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டின் பல பிரதேசங்களில் இடம்பெற்ற விபத்துக்களில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்

வவுனியாவில் இன்றும் தொடர்ந்த போராட்டம்!

வவுனியாவில் இன்றும் தொடர்ந்த போராட்டம்!

சித்திரை வருடப்பிறப்பான இன்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வவுனியாவில் ஆர்ப்பாட்டத்தில்

அரசியல் கைதி ஆனந்த சுதாகரின் பிள்ளைகள் ஏமாற்றம்! - ஜனாதிபதியின் வாக்குறுதி காற்றில் பறந்தது

அரசியல் கைதி ஆனந்த சுதாகரின் பிள்ளைகள் ஏமாற்றம்! - ஜனாதிபதியின் வாக்குறுதி காற்றில் பறந்தது

புத்தாண்டில் தமது தந்தை விடுவிக்கப்படுவார் என்று எதிர்பார்த்திருந்த அரசியல் கைதி சச்சிதானந்தன் ஆனந்த

கௌரவத்துடனும், சுய உரிமையுடனும் வாழும் நிலையை விளம்பி வருடம் ஏற்படுத்த வேண்டும்! - சம்பந்தன்

கௌரவத்துடனும், சுய உரிமையுடனும் வாழும் நிலையை விளம்பி வருடம் ஏற்படுத்த வேண்டும்! - சம்பந்தன்

மக்கள் கௌரவத்துடனும் பாதுகாப்புடனும், சுய உரிமையுடனும் வாழும் நிலை ஏற்பட பிறக்கும் விளம்பி

நாடாளுமன்றம் கலைக்கப்படாது!

நாடாளுமன்றம் கலைக்கப்படாது!

நாடாளுமன்றத்தைக் கலைக்கும் எண்ணம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இல்லை என்று ஜனாதிபதியின்

முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | சினிமா | படத்தொகுப்பு | தொடர்பு புலிகள் மீதான தடையை நீக்கக் கோரி கனடிய நாடாளுமன்றில் தனிநபர் பிரேரணை!

முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | சினிமா | படத்தொகுப்பு | தொடர்பு

புலிகள் மீதான தடையை நீக்கக் கோரி கனடிய நாடாளுமன்றில் தனிநபர் பிரேரணை!

விடுதலைப் புலிகளுக்கு எதிராக கனடா விதித்துள்ள தடைகளை நீக்குமாறு கனடிய நாடாளுமன்ற உறுப்பினர்

23 ஆம் திகதியே அமைச்சரவை மாற்றம்!

23 ஆம் திகதியே அமைச்சரவை மாற்றம்!

எதிர்வரும் 23 ஆம் திகதி அமைச்சரவை முழுமையாக மாற்றியமைக்கப்படுடும் என ஜனாதிபதியின்