வியாழன், அக்டோபர் 03, 2019

யாழில் முதியவரின் கைவரிசையால் பாடசாலை மாணவி 03 மாத கர்ப்பம்

யாழில் முதியவரின் கைவரிசையால் பாடசாலை மாணவி 03 மாத கர்ப்பம்
யாழில் 62 வயது முதியவரால் தொடர் பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கப்பட்ட 13 வயது சிறுமி 3 மாத கர்ப்பவதியாக இருப்பது தெரிய வந்துள்ளது.முதியவர் நேற்றிரவு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மானிப்பாய் முத்துதம்பி வீதியை சேர்ந்த 13 வயதான சிறுமியொருவரே வன்புணர்விற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். சிறுமியின் அயல்வீட்டை சேர்ந்த 62 வயதான நபரே இந்த பாதகத்தை புரிந்துள்ளார்.

மூன்று மாதங்களின் முன்னர் சிறுமிக்கு ரொபி கொடுத்து, ஆசைகாட்சி வன்புணர்விற்கு உள்ளாக்கியுள்ளார்.

இந்த நிலையில் சிறுமியின் உடலில் ஏற்பட்ட மாற்றங்களையடுத்து, அவர் இன்று யாழ் போதனா வைத்தியசாலையில் பரிசோதனைக்குள்ளாக்கப்பட்டார். இதன்போது, சிறுமி 3 மாத கர்ப்பவதியாக இருப்பது தெரிய வந்தது.