4 அக்., 2019

கோத்தாவின் தலை விதியை தீர்மானிக்கும் தீர்ப்பு இன்று மாலை 6 மணிக்கு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவின் இரட்டை குடியுரிமை தொடர்பாக மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டுவரும் வழக்கின் தீர்ப்பு இன்று மாலை 6 மணிக்கு வழங்கப்படவுள்ளது.

எழுத்துமூல ஆட்சேபனைகள் 3 மணிக்குள் ஏற்றுக் கொள்ளப்படவுள்ளன .

இந்த வழக்கையொட்டி நீதிமன்ற வளாகத்தில் கடும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.