புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

4 அக்., 2019

பொதுவேட்பாளரை தேடும் தமிழர் தரப்பு

ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பில் நிறுத்துவதற்காக கட்சி சார்பற்ற பொதுவேட்பாளரை ஒருவரை அடையாளம் காணும் முயற்சியில் சிவில் சமூகப் பிரதிநிதிகள் தீவிரமான ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பில் நிறுத்துவதற்காக கட்சி சார்பற்ற பொதுவேட்பாளரை ஒருவரை அடையாளம் காணும் முயற்சியில் சிவில் சமூகப் பிரதிநிதிகள் தீவிரமான ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழர் தரப்பில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தும் முயற்சியில ஈடுபட்டுள்ள தமிழ் மக்கள் பேரவையினால் நியமிக்கப்பட்டுள்ள சுயாதீனக் குழுவினர், பொதுவேட்பாளரை நிறுத்துவது குறித்து கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் கஜேந்திரகுமார் ஆகியோருடன், கொழும்பில் பேச்சு நடத்தியிருந்தனர்.

இரா.சம்பந்தனை பொதுவேட்பாளராக போட்டியிடுமாறும் அவர்கள் அழைப்பு விடுத்திருந்தனர். ஆனால் அவர் அதனை நிராகரித்து விட்டார்.

இந்த நிலையில், சிவில் சமூகப் பிரதிநிதிகள் நேற்றுக் காலை நல்லூரில், சி.வி விக்னேஸ்வரனை அவரது இல்லத்தில் சந்தித்தனர். அப்போது அவர், ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளர் களமிறக்கப்பட்டால் அவரை ஆதரிக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

விக்னேஸ்வரனை பொதுவேட்பாளராக களமிறங்கும்படி சிவில் பிரதிநிதிகள் விடுத்த கோரிக்கையை மறுத்த அவர் கட்சி சார்பில்லாத பொது வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்பட்டால் அவரை ஆதரிக்க தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

Bookmark and Share Seithy.com