புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 அக்., 2019

இளையராஜாவுக்கு இடையூறு! பிரசாத் ஸ்டூடியோ மீது காவல் நிலையத்தில் புகார்

இசையமைப்பாளர் இளையராஜாவின் உதவியாளராக இருப்பவர் ஜாபர். இவர் விருகம்பாக்கம் போலீசில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில், "இசையமைப்பாளர் இளையராஜாவிடம் உதவியாளராக பணிபுரிந்து வருகிறேன். கடந்த 40 வருடங்களுக்கு முன்பு பிரசாத் ஸ்டூடியோ உரிமையாளரான எல்.வி.பிரசாத், இளையராஜாவிற்காக தங்களது ஸ்டூடியோவில் தொடர்ந்து தங்கி இசை அமைத்துக் கொள்ளுமாறு கூறியிருந்தார்.

ஸ்டூடியோவில் ரெக்கார்டிங் தியேட்டர் ஒன்றையும் இளையராஜாவிற்கு கொடுத்துள்ளார். தற்போது வரை இளையராஜா, அந்த ஸ்டூடியோவைதான் பயன்படுத்தி வந்தார். ஆனால் கடந்த செப்டம்பர் 6-ம்தேதி முதல் பிரசாத் ஸ்டூடியோ ஊழியர்கள் இசையமைப்பாளர் இளையராஜா இசையமைக்கும் ரெகார்டிங் தியேட்டரில் 20 கம்ப்யூட்டர் டேபிளை வைத்து கொண்டு இடையூறு செய்து வருவதாக புகாரில் தெரிவித்துள்ளார்.


அதனால் இளையராஜா மற்றும் அவரது இசைக்கலைஞர்கள் ரெக்கார்டிங் தியேட்டரில் அமர்ந்து இசையமைக்க இடையூறாக உள்ளது. இளையராஜாவுக்கு சொந்தமான பல லட்ச ரூபாய் மதிப்புள்ள டிஜிட்டல் இசை உபகரணங்கள் உள்ளே உள்ளது. அவை அனைத்தும் சேதமாக வாய்ப்பு உள்ளது.


பிரசாத் லேப் உரிமையாளர் சாய் பிரசாத், நிர்வாகிகள் பாஸ்கர், சிவராமன் ஆகியோரிடம் விசாரணை நடத்தி காவல்துறை தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று புகாரில் கூறியுள்ளார். இந்த புகாரை ஜாபர் தபால் மூலமாக விருகம்பாக்கம் காவல்நிலையத்திற்கு அனுப்பி உள்ளார். புகாரை பெற்றுக் கொண்டு விருகம்பாக்கம் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ad

ad