புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 அக்., 2012

நெல்லியடியில் வைத்தியசாலை சென்ற இளம் தாயும் குழந்தையும் மாயம்
நெல்லியடி, வைத்தியசாலைக்குச் சென்ற இளம் தாயும் அவரது ஒரு வயதுப் பெண் குழந்தை யும் கடந்த திங்கட்கிழமை முதல் கா ணா மல் போயுள்ளதாக கணவரால் நெல் லி யடி பொலிஸ் நிலையத்தில் முறை ப்பாடு செய் யப்பட்டுள்ளது.

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையில் சர்வதேச வல்லரசுகளின் நிகழ்ச்சிநிரல் என்ன?இதயச்சந்திரன்
இதற்கான பதிலைத் தேடும்போது இந்தியா,சீனா,மேற்குலகு என்கிற மூன்று முக்கிய சக்திகளின் நகர்வுகள் முக்கியத்துவம் பெறுகிறது. இதில் 80 களின் ஆரம்பத்தில் உருவான இந்திய-அமெரிக்க ஆதிக்கப்போட்டி இற்றைவரை நீடிப்பதை அவதானிக்கலாம்.
இளையராஜாவின் எங்கேயும் எப்போதும் நிகழ்ச்சி நடக்கும்! - அமைப்பாளர்கள் உறுதி

நவம்பர் மூன்றாம் தேதி நடக்க இருக்கும் ‘எங்கேயும் எப்போதும்’ என்ற இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சிக்கான வேலைகள் பரபரப்பாக நடந்துக் கொண்டிருக்கின்றன என்று நிகழ்ச்சி அமைப்பாளர்களான ட்ரினி ஈவண்ட்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள பத்திரிகை குறிப்பில் இந்தத் தகவலைத் தெரிவித்திருக்கிறார்கள்.
குடிவரவு மற்றும் ஏதிலி பாதுகாப்பு சட்டம் மேன்முறையீட்டு வழக்கு இன்று கனடிய உச்ச நீதிமன்றம், வழக்கில் கனடிய தமிழர் பேரவை தலையீடு
இன்று அக்றேய்றா (Agraira) என்பவர்  பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் அவசரகால முன்னேற்பாடு அமைச்சர் அவர்கட்கு எதிரான மேன்முறையீட்டை கனடிய உச்ச நீதிமன்றம் இன்று விசாரணைக்கு  எடுத்துக் கொண்டது.  இது ஒரு முக்கிய வழக்கு. இதில் தலையீடு செய்யும் தகுதியை உச்ச நீதிமன்றம் கனடிய தமிழர் பேரவை (கதபே-CTC) க்கு வழங்கியுள்ளது.  இந்த  வழக்கு குடிவரவு மற்றும் ஏதிலி
தென்னிந்தியத் திரைப்படத்துறையின் பலம் ஈழத்தமிழர்களின் கைகளிலும் தங்கியிருக்கின்றது: - இளையராஜா..(காணொளி)
நான் இத்தடவை கனடா வருவதற்கு இங்கு வாழும் ஈழத்தமிழ் மக்களே காரணமாக உள்ளார்கள். அவர்களை நான் என்றும் மதிக்கின்றேன். முக்கியமாக தென்னிந்தியத் திரைப்படத்துறையானது தற்காலத்தில் மிகவும் பலம் பொருந்தியதாக இருப்பதற்கும் அங்கு தமிழகத்தில் தயாராகும் திரைப்படங்கள் உலகளவில் வெற்றி பெறுவதற்கும் காரணமாகத் திகழ்பவர்களில் ஈழத்தமிழர்கள் மிக முக்கியமானவர்கள் என்பதை நான் நன்கு உணர்கின்றேன்.
 

விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் என்ற கருதப்படும் ஒருவரை கனேடிய குடிவரவுத்துறை அதிகாரிகள், நாடு கடத்த முனைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இவர் கடந்த 15 வருடங்களாக கனடாவில் வசித்து வருகிறார். குறித்த தமிழர், கனடாவில் விடுதலைப் புலிகளுக்காக நிதி சேகரிப்பில் ஈடுபட்டு வந்துள்ளார். அத்துடன், சர்வதேச தமிழர் இயக்கத்திலும் அங்கம் வகித்துள்ளார்.

நேரடியாக மோதினார்கள் ஜனாதிபதி வேட்பாளர்கள்! முந்துகிறார் ஒபாமா!

 செவ்வாய் இரவு இரண்டாவது முறையாக நேரடி விவாதத்தில் மோதினார்கள் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் பராக் ஒபாமாவும் மிட் ரோம்னியியும்.
இது அத்தனை எளிதான மோதல் அல்ல. உலகிலேயே மிக முக்கியமான தேர்தலில் போட்டியிடும் இருவரின் நேரடியான, முகத்துக்கு முகம் பார்த்த மோதல். ஒன்றரை மணி நேரம் நடந்தது,
மண்டபம் முகாமில் 65 இலங்கை அகதிகள் உண்ணாவிரதம்
இராமேஸ்வரம் மண்டபம் அகதிகள் முகாமில் 32 நாட்களாக இருட்டறையில் அடைக்கப்பட்ட 65 தமிழர்கள் நேற்று வியாழக்கிழமை உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளனர்.

19 அக்., 2012


நியாயத்திற்கு நீர் வார்க்காமல் துரோகத்திற்கு பால் வார்த்தேன் - கலைப்புலி தாணு பேச்சு!


இயக்குனர் இகோர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘தேன்கூடு’. திரிகோணமலை மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் இந்திய, இலங்கைப்படைகள் ஆகிரமிப்பு செய்தை தழுவி எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் தேன்கூடு. இப்படத்தின் முன்னோட்டம் வெளியீடு இன்று
சென்னையில் அரசு கேபிள் ஒளிபரப்பு!
சென்னையில் அரசு கேபிள் டிவி ஒளிபரப்பு சேவையை முதல்வர் ஜெயலலிதா நாளை (20.10.2012) துவக்கி வைக்க உள்ளார்.சென்னையில் அரசு கேபிள் டிவி சேவையை துவக்குவதற்கான எம்எஸ்ஓ எனப்படும் உரிமம் பெறப்பட்டதை அடுத்து நாளை (20.10.2012) முறைப்படி துவக்கப்பட

ஆதீனத்தின் காலைப்பிடித்து நித்தி சீடர்கள் கதறல்
நித்தியானந்தாவை மதுரை ஆதீன மடத்தின் பொறுப்பிலிருந்து நீக்குவது என்று மதுரை ஆதீனம் முடிவெடுத்துவிட்டார்.  இதனால் அவரது உயிருக்கும், மடத்தின் பாதுகாப்புக்கும் ஆபத்து ஏற்பட்டு விடும் என்று அஞ்சுகிறார்.  இதையடுத்து அவர், மடத்தில் தங்கியிருக்கும் நித்தி சீடர்களை வெளியேற்றக்கோரி போலீஸில் புகார் அளித்துள்ளார்.

காருக்குள் கதறி அழுத நித்தி
மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நித்தியானந்தா நியமிக்கப்பட்டிருந்தார்.   இன்று இரவு மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் நித்தியானந்தாவின் நியமனத்தை நீக்கி அறிவித்தார்.
இதையடுத்து மதுரை ஆதீன மடத்திற்குள் இருந்த நித்தியின் சீடர்கள் வெளியேற்றப்பட்டனர். 
இந்த செய்தி திருவண்ணாமலையில் இருந்த நித்தியானந்தாவிற்கு தெரியவந்ததும்,  அவர் அலறி அடித்துக்கொண்டு காரில் ஏறி மதுரைக்கு விரைந்தார்.காருக்குள் அவர் கதறி அழுதார்
.

நீதிமன்றத்திற்கு தலைவணங்கி நித்தியானவந்தாவை நீக்கினேன் :
அருணகிரி அதிரடி பேட்டி
நித்தியானந்தாவை நீக்கம் செய்த பிறகு மதுரை ஆதீனம் செய்தியாளர்களை சந்தித்தார்.நீத்தியானந்தாவை ஏன் நீக்கினீர்கள்?
நீதிமன்றத்திற்கு தலைவணங்கி இப்போதுள்ள வழக்கு சூழ்நிலை கருதி நித்தியானவந்தாவை நீக்கினேன்.

நித்தி நீக்கம் : அருணகிரிநாதர் அதிரடி அறிவிப்பு
மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் இன்று இரவு அதிரடி அறிவிப்பு வெளியிட்டார்.ஆதீனத்தின் வாரிசாக எம்மால் 23 .4.2012ம் நாள் நியமிக்கப்பட்டு 27.4.2012 ஆவணத்தின் மூலம் உறுதி செய்யப்பட்ட பெங்களூர் ஆசிரம பீடாதிபதி நித்தியானந் தாவை இன்று 19.10.2012 முதல் வாரிசாக பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டதாக இந்த அறிவிப்பின் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன் என்று அவர் அறிவித்தார்.

என் உயிருக்கு ஆபத்து ; நித்தி சீடர்களை வெளியேற்றுங்கள்: மதுரை ஆதீனம் போலீசில் பரபரப்பு புகார்
மதுரை ஆதீனம் இன்று இரவு 8 மணிக்கு மதுரை விளக்குத்தூண் காவல்நிலையத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்று அளித்துள்ளார்.அம்மனுவில்,  ‘’நித்தியானந்தாவை நான் மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாகநியமித்தேன்.    சில காரணங்களால் நாளை நான்,  நித்தியானந்தாவை மதுரை ஆதீனம் பொறுப்பில் இருந்து நீக்குவது என்று முடிவெடுத்திருக்கிறேன். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஜனநாயக ரீதியாக போராட்டம் நடத்துகின்றனர்: யாழ். பொலிஸ்மா அதிபர் புகழ்ச்சி
யாழ்ப்பாணத்தில் நடைபெறுகின்ற ஆர்ப்பாட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சரியான முறையில் சட்டத்தை அனுசரித்து, கடைப்பிடித்து நீதியாக நடந்து கொள்வதாக யாழ். பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்துள்ளார்.

15 வயது சிறுமி மீது பாழடைந்த வீட்டுக்குள் வல்லுறவு! 19 வயது இளைஞன் கைது! யாழ்.இளவாலையில் சம்பவம்!
யாழ்ப்பாணம், இளவாலைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 15 வயது நிரம்பிய சிறுமி ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய 19 வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்.பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்தார்.

புலிகளின் நிதிப் பொறுப்பாளர் ரத்னசபாபதி விடுதலை செய்யப்பட்டுள்ளார்: திவயின
தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதிப் பொறுப்பாளர் ரத்னசபாபதி விடுதலை செய்யப்பட்டுள்ளார் என சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நடிகை திரிஷா தந்தை மாரடைப்பால் திடீர் மரணம்
 

நடிகை திரிஷா தந்தை கிருஷ்ணன்(68) மாரடைப்பால் மரணம் அடைந்தார்.  கிருஷ்ணன் சென்னை ஓட்டல்களில் மானேஜராக பணியாற்றி வந்தார். திரிஷா முன்னணி நடிகையானதும் ஓட்டல் வேலையை விட்டு விடும்படி வற்புறுத்தினர். அவர் கேட்க வில்லை.
 

தீக்குளித்த கணவனை கட்டிப்பிடித்த காதல் மனைவியும் உயிரிழந்தார்
குடும்ப பிரச்னையில் தீக்குளித்த கணவனை கட்டிப்பிடித்த காதல் மனைவியும் இறந்தார். 
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த உடையாந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம் மகன் கமலஹாசன், 34. இவர் செஞ்சியை அடுத்த காரை பகுதியில் ஸ்டேட் பேங்கின் வாடிக்கையாளர் சேவை முகவராக பணிபுரிந்து வந்தார். 

ad

ad