புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 அக்., 2012


நேரடியாக மோதினார்கள் ஜனாதிபதி வேட்பாளர்கள்! முந்துகிறார் ஒபாமா!

 செவ்வாய் இரவு இரண்டாவது முறையாக நேரடி விவாதத்தில் மோதினார்கள் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் பராக் ஒபாமாவும் மிட் ரோம்னியியும்.
இது அத்தனை எளிதான மோதல் அல்ல. உலகிலேயே மிக முக்கியமான தேர்தலில் போட்டியிடும் இருவரின் நேரடியான, முகத்துக்கு முகம் பார்த்த மோதல். ஒன்றரை மணி நேரம் நடந்தது,

‘ஜனாதிபதி ஒபாமா நிறைய முயற்சி செய்தார். ஆனால் அவரால் முடியவில்லை.  அவர் மிக சிறந்த பேச்சாளர். தன்னுடைய திட்டங்களையும் கனவுகளையும் அழகாக பேசுவார். ஆனால் அவரால் எதையும் செயல்படுத்த இயலவில்லை என்பது அவருடைய வரலாற்றைப் பார்த்தல் தெரிகிறது’ என்று ஒபாமாவைத் தாக்கி ரோம்னி பேச அதற்கு பதிலடி கொடுத்தார் ஒபாமா. 

‘இவருடைய முன்னோடி ஜார்ஜ் புஷ் தீவிர குணம் மிக்கவர். அவருக்கும் ரோம்னிக்கும் என்ன வித்தியாசம்?’ என்று கேட்டார். 

பெண்கள் வேலை வாய்ப்பு பற்றி பேசும்போது ‘ நானும் என்னுடைய அலுவலகத்தில் நிறைய பெண்கள் வேண்டும் என்று கேட்டேன், உடனே ‘பைண்டர்’களில் பெண்களைக் கொண்டு வந்து விட்டார்கள்’ என்று ரோம்னி சொல்ல, அந்த பைண்டர் என்ற வார்த்தைக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பைண்டர்கள் என்றால் காகிதங்கள், பத்திரிகைகள் போன்ற பொருட்களை கொண்டு செல்லும் பை. 

இந்த சொல்லை வைத்து ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் போன்ற சமூக இணையதளங்களில் ஏகப்பட்ட கிண்டல் கணைகள் ரோம்னியை நோக்கி பாய்ந்திருக்கிறது. 

சில நாட்களுக்கு முன் நடந்த முதல் நேரடி விவாதத்தில் ரோம்னி முன்னிலை பெற்றதாக கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. இந்த மோதலில் ரோம்னியின் முன்னேற்றத்தை தடுத்ததோடு தானும் சற்று முன்னேறியிருக்கிறார் என்று தகவல்கள் கூறுகின்றன.
 

ad

ad