புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 அக்., 2012


நியாயத்திற்கு நீர் வார்க்காமல் துரோகத்திற்கு பால் வார்த்தேன் - கலைப்புலி தாணு பேச்சு!


இயக்குனர் இகோர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘தேன்கூடு’. திரிகோணமலை மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் இந்திய, இலங்கைப்படைகள் ஆகிரமிப்பு செய்தை தழுவி எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் தேன்கூடு. இப்படத்தின் முன்னோட்டம் வெளியீடு இன்று சென்னையில் நடந்தது. முன்னோட்ட வெளியீட்டு விழாவில் உணர்ச்சிக் கவிஞர் காசிஆனந்தன், தமிழச்சி தங்கபாண்டியன், ஜனநாதன், இயக்குனர் அமீர், சீமான், தயாரிப்பாளார் கலைப்புலி எஸ்.தாணு ஆகியோர்  கலந்துகொண்டனர்.  

தேன்கூடு திரைப்படத்தின் முன்னோட்டம் அடங்கிய முதல் பதிப்பை இயக்குனர் அமீர் வெளியிட காசிஆனந்தன் பெற்றுக்கொண்டார். விழா முடிந்ததும் மேடையில் பேசிய தாணு சீமான் இயக்கத்தில் பகலவன் படத்தை விரைவில் துவங்குவேன் என்று கூறினார்.

மேலும் அவர் “ சீமான் இயக்கத்தில் நான் பகலவன் படம் தயாரிக்க திட்டமிட்டு அறிவித்திருந்தது அனைவருக்கும் தெரியும். நியாயத்திற்கு நீர் வார்க்காமல் துரோகத்திற்கு பால் வார்த்தேன். 
ஆனால் கண்டிப்பாக சீமான் இயக்கத்தில் பகலவன் படம் விரைவில் துவங்கப்படும். பகலவன் வெளியாகி பார் போற்றும் அளவிற்கு படம் ரிலீஸாகும்” என்று பேசினார். தாணு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகவிருக்கும் துப்பாக்கி படம் எஸ்.ஏ.சந்திரசேகர் தயாரிப்பில் துவங்கப்பட்டது. துப்பாக்கி முடிந்ததும் சீமான் இயக்கத்தில் தாணு தயாரிக்க விஜய் நடிப்பில் பகலவன் துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 
ஆனால் துப்பாக்கி பட தயாரிப்பு நிர்வாகத்தில் ஏற்பட்ட சில பிரச்சனைகளால், துப்பாக்கி தாணுவிடம் கைமாறியது. பகலவன் படத்திலும் விஜய் நடிக்கவில்லை என அறிவிக்கப்பட்டு “தவறை உணரும் காலம் வரும். அப்போது உணர்வார்கள்” என்று சீமான் பேட்டியெல்லாம் கொடுத்திருந்தார்.
இந்நிலையில் தாணு ‘நியாயத்திற்கு நீர் வார்க்காமல் துரோகத்திற்கு பால் வார்த்தேன் எனக் கூறியிருப்பது திரையுலகில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ad

ad