புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 பிப்., 2013


ஜெனீவாவில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கு அஞ்சப் போவதில்லை என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எமது இதய பூர்வமான வாழ்த்துக்கள் 

ஐ.நா மனித உரிமைப் பேரவை இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்!- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

வேறொரு பிரபலமான இணையம்  இந்த நலன்புரி சங்கம் இங்கிலாந்தில் உள்ளது போல எழுதாமலும் ஸ்ரீதரன் எம் பி தானே  தென்னங்ககன்றுகளை தான்  செலவில் கொடுத்தது  தலையங்கம் தீட்டி  உள்ளது. கீழே  உள்ளதை கவனியுங்கள் (புங்குடுதீவு கிராமத்திற்கு பா.உறுப்பினர் சிறீதரனால் 1000 தென்னங்கன்றுகள் வழங்கி வைப்பு)புங்குடுதீவு நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் புங்குடுதீவு கிராமத்திற்கு 1000 தென்னங்கன்றுகள் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் ஊடாக மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.)
இங்கிலாந்தின் புங்குடுதீவு நலன்புரிச்  சங்கம்  சுமார் 1000 பவுண்ட்ஸ் செலவில்  புங்குடுதீவு கிராமத்திற்கு 1000 தென்னங்கன்றுகள்  கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் ஊடாக மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 

STFA Tamil Youth Inddor 2013
ZEIT MANNSCHAFTEN Kat.

3 பிப்., 2013


England Women 272/8 (50 ov)
India Women 240/9 (50.0 ov)
England Women won by 32 runs

ஸ்டாலின் குழுவினரின் டில்லி பயணத்தினால் தமிழர்களுக்கு பயன் இல்லை!- உலகத் தமிழர் அமைப்புகள்
தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் தலைமையில், டில்லி சென்ற குழுவினர், இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக செயல்படக் கூடிய ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகளின் தூதர்களை சந்திக்கவில்லை. இதனால், இந்த குழுவின் பயணத்தால்,

அரசியலில் தேரர்கள் ஈடுபடுவதை பௌத்த மதம் தடை செய்துள்ளது: புத்தரக்கித்த தேரர்
பௌத்த தேரர்கள் நடைமுறை அரசியலில் ஈடுபடுவது இன்றைய காலத்திற்குப் பொருந்தாது என்று அஸ்கிரிய பீடத்தின் மஹாநாயக்க தேரர் உடுகம ஸ்ரீ புத்தரக்கித்த தேரர் தெரிவித்தார்.

ஜெனீவா ஐநா பேரவையில் இலங்கைக்கு எதிராக 209 யோசனைகள் முன்வைப்பு
ஜெனீவாவில் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள ஐநா மனித உரிமைகள் பேரவை அமர்வில் இலங்கைக்கு எதிராக 209 யோசனைகள் முன்வைக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

2 பிப்., 2013

ஜோகனர்ஸ்பர்க்: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில், பாகிஸ்தான் அணி 49 ரன்களுக்கு சுருண்டது. தென் ஆப்ரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகின்றன. ஜோகனர்ஸ்பர்க்கில் துவங்கிய முதல் டெஸ்டில், முதல் இன்னிங்சை விளையாடிய தென் ஆப்ரிக்கா அணி, 253 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பின்னர் தனது முதல் இன்னிங்சை துவக்கிய பாகிஸ்தான் அணி, 49 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பரிதாபமாக இழந்து சுருண்டது. தென் ஆப்ரிக்கா தரப்பில், ஸ்டெயின் 8 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தான் அணியின் மிகக்குறைந்த ஸ்கோர் இதுவாகும்.

க.பொ.த உயர்தரப் பரீட்சையில் 9057 பேர் 3 பாடங்களில் “ஏ” சித்தி!
2012ம் ஆண்டு புதிய பாடத்திட்டத்தின் கீழ் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் மூன்று பாடங்களிலும் சித்தியடைந்த 128, 809 மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்குச் செல்லத் தகுதி பெற்றுள்ளனர்.

சுவிட்சர்லாந்து வாழ் புங்குடுதீவு ஏழாம் ,எட்டாம் வட்டார மக்களின் 

                                         விருந்துபசார வைபவம்


காலம்;- 03.02.2013 ஞாயிறு மாலை 3 மணி
இடம்  :- .Mädergutstr, 3018 Bern .kleefeld Zentrum (நிமலன் வீட்டுக்கு அருகில்)


எமது மடத்துவெளி ஊரதீவு மக்களை ஒருங்கிணைத்து உறவாடி நட்பார்ந்த நல்வழியில் நமக்குள்ளே அன்பால் உறவால் ஊர்ப்பற்றால் கட்டுண்டு கிடக்க வழி சமைப்போம் . ஏழாம் , எட்டாம் வட்டார  மடத்துவெளி ஊரதீவு மக்கள் யாராகிலும் இந்த வைபவத்தில் குடும்பமாக கலந்து சிறப்பிக்கலாம் .  முடிந்தவரை நாம்  தொலைபேசி ஊடாகவும் அழைப்பை உண்டுபண்ணுவோம்,தொடர்பு கிடைக்காதவர்களும் ஊர் மீதான பற்றை மனதில்  எண்ணி நீங்களாகவே  இந்த அழைப்பை ஏற்று  கலந்து சிறப்பிக்குமாறு  கேட்டுக் கொள்கிறோம் . எமக்குள்ளே எமது கிராமங்களின் பண்பை உறவை பற்றை வளர்த்தெடுப்பதற்கான ஒரு பாரிய முயற்சியே இது.
உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும்  பங்கு கொள்ளுமாறு அன்போடு அழைக்கின்றோம் . தேநீர் ,சிற்றுண்டிகள், மாலை உணவு, குளிர்பானங்கள் வழங்கப்படும்


முக்கிய குறிப்பு ;- இந்த வைபவத்தில் எவ்விதமான நிதி சேகரிப்போ அன்றி அன்பளிப்பு சம்பந்தமான அறிவிப்புக்களோ இருக்க மாட்டாது.

                                                                             தங்கள் வரவை நாடும் அமைப்பாளர்கள்

தொடர்புகள்

                           இ.ரவீந்திரன்                         079 218 70 75
                           சு.சண்முகநாதன்                044  451 80 22
                           நா.ஜெயக்குமார் (பாபு )     031 862 18 03 


அமெரிக்காவின் பிரேரணை சாதாரண விடயமல்ல! ஐநா பொருளாதார தடை விதிக்கும் சாத்தியம்! எச்சரிக்கிறார் விதாரண
ஜெனிவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐநா மனித உரிமைகள் பேரவையின் 22வது கூட்டத்தொடரில் அமெரிக்கா இலங்கைக்கு எதிராக மற்றுமொரு பிரேரணையை கொண்டுவர முயற்சிப்பதை சாதாரண விடயமாக கருதமுடியாது. என்று அமைச்சரும்

பா .உ.ஸ்ரீதரன் அவர்களின் அலுவலக வழக்கு தொடர்பாக ஆஜராகி வாதடவிருக்கும் புங்குடுதீவைச் சேர்ந்த  கொழும்பின் பிரபல  உயர் சட்டத்தரணி கே.வீ.தவராசா  அவர்கள் சொந்தக் குரலில் தந்துள்ள பேட்டி 

பா.உ.சிறிதரன் அலுவலக சோதனையும் கைதும் தொடர்பில் வழக்கறிஞர் தவராஜா லங்காசிறி வானொலிக்கு வழங்கிய பேட்டி
விஸ்வரூபம் விவகாரம் குறித்து நடிகர் கமல் ஹாசனுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது, உங்கள் மீது அமைதியும் சமாதானமும் நிலவட்டுமாக. நீங்கள் உலகப் புகழ்பெற்ற தலை சிறந்த நடிகர் என்பது உண்மை; நீங்கள் ஒரு முற்போக்கு சிந்தனையாளர் என்பதும் உண்மை. திரை உலகத்தில் சம்பாதித்து

1 பிப்., 2013


England Women 238/8 (50 ov)
Sri Lanka Women 244/9 (50.0 ov)
Sri Lanka Women won by 1 wicket (with 0 balls remaining)

‘புரட்சித் தலைவி, முதல்வர் அம்மாவுக்கு நன்றி நன்றி!’ – கமல் சார்பில் சிவகுமார், ராதிகா

சென்னை: விஸ்வரூபம் படத்துக்கு எதிரான தடையை விலக்கிக் கொள்ள முன்வந்துள்ள முதல்வர் ஜெயலலிதாவுக்கு கமல் சார்பில் நன்றி தெரிவித்துள்ளனர் சிவகுமார், ராதிகா உள்ளிட்ட சினிமாக்காரர்கள். கமல்ஹாஸனின் விஸ்வரூபம் படத்துக்கு எதிராக தமிழக அரசு கடுமை

மகிந்த ராஜபக்சவை எதிர்த்து திருப்பதியிலும் கறுப்புக்கொடி போராட்டம்!- வைகோ அறிவிப்பு!
இலங்கை அதிபர் திருப்பதி வர உள்ள நிலையில், அவரது வருகைக்கு எதிராக அங்கும் அறப்போராட்டம் நடத்தப்படும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

10 பேர் கொண்ட குழுவை இலங்கைக்கு அனுப்பவுள்ளார்! மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ள
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்துதல் தொடர்பில் மதிப்பிடுவதற்கு இலங்கைக்கு 10 விசேட அறிக்கையாளர்கள் குழுவை  அனுப்பும் நோக்கத்தில் உள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

ad

ad