புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 பிப்., 2013


ஜெனீவாவில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கு அஞ்சப் போவதில்லை என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்கா தலைமையிலான நாடுகள் இந்த தீர்மானத்தை நிறைவேற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இந்தத் தீர்மானம் குறித்த சவாலை வெற்றிகரமாக முறியடிக்கும் ஆற்றல் இலங்கையிடம் காணப்படுகின்றது என அவர் குறி;ப்பிட்டுள்ளார்.
பதுரலிய பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அமர்வுகளில் இலங்கைக்கு எதிரான கேள்விகளுக்கு பதிலளிக்கும் பிரதிநிதிகள் குழுவிற்கு மஹிந்த சமரசிங்க தலைமை தாங்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ad

ad