புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 பிப்., 2013


10 பேர் கொண்ட குழுவை இலங்கைக்கு அனுப்பவுள்ளார்! மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ள
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்துதல் தொடர்பில் மதிப்பிடுவதற்கு இலங்கைக்கு 10 விசேட அறிக்கையாளர்கள் குழுவை  அனுப்பும் நோக்கத்தில் உள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வருடம் ஐ.நா. மனித உரிமையாளரின் அலுவலகத்திலிருந்து மூன்று அதிகாரிகள் இலங்கை வந்திருந்தனர். ஆனால், விசேட அறிக்கையாளர்களை அனுப்புவதற்கான வேண்டுகோளை இலங்கை அரசாங்கம் நிராகரித்துவிட்டது.
பதிலுக்கு போர் முடிந்த பின் அடையப்பட்டுள்ள முன்னேற்றங்களை நவநீதம்பிள்ளை இலங்கைக்கு வந்து நேரடியாக காணவேண்டுமென வெளிவிவகார அமைச்சு வலியுறுத்தி வருகின்றது.
ஆரம்பத்தில் இவ்வாறுதான் ஒழுங்கு செய்யப்பட்டது. முதலில் நவநீதம்பிள்ளையின் அலுவலக அதிகாரிகள் குழுவொன்று இலங்கைக்கு வந்து சகல பங்குதாரர்களுடனும் பேசினர்.
நவநீதம்பிள்ளையின் விஜயத்துக்கான தளமிடுவதற்காகவே அவர்கள் வந்தனர்.
நாம் இந்த நிலைப்பாட்டிலேயே உள்ளோம். இங்கு வருவதற்கு உடன்பட முடியாது என வெளிவிகார அமைச்சைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறினார்.
அண்மையில் நவநீதம்பிள்ளை இலங்கையை கடுமையான விமர்சித்துள்ளார்.
முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கா மீதான குற்ற பிரேரணையில் கைக்கொள்ளப்பட்ட செயன்முறையை கடுமையான விமர்சித்த அவர் இலங்கை அரசாங்கத்துக்கு கடிதம் எழுதினார்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்துதல் தொடர்பான முன்னேற்றம் குறித்து மனித உரிமை பேரவையின் அடுத்த அமர்வில் நவநீதம்பிள்ளை ஓர் அறிக்கையை சமர்பிக்க வேண்டும்.
மேலும் முன்னைய தீர்மானத்துக்கு வலுவூட்டும் வகையில் அடுத்த அமர்வில் இலங்கைமீது இன்னுமொரு தீர்மானத்தை தாம் கொண்டுவர உள்ளதாக அமெரிக்க அறிவித்துள்ளது.

ad

ad