-

3 பிப்., 2013


அரசியலில் தேரர்கள் ஈடுபடுவதை பௌத்த மதம் தடை செய்துள்ளது: புத்தரக்கித்த தேரர்
பௌத்த தேரர்கள் நடைமுறை அரசியலில் ஈடுபடுவது இன்றைய காலத்திற்குப் பொருந்தாது என்று அஸ்கிரிய பீடத்தின் மஹாநாயக்க தேரர் உடுகம ஸ்ரீ புத்தரக்கித்த தேரர் தெரிவித்தார்.
முதலீட்டு ஊக்குவிப்பு பிரதி அமைசச்ர் பைசர் முஸ்தபா இன்று அஸ்கிரிய பீடாதிபதியை சந்தித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.
இங்கு மேலும் உரையாற்றிய அவர்,
நாட்டின் அரசாங்கத்திற்கும் அரச தலைவருக்கும் உபதேசம் செய்வதற்கு தேரர்களுக்கு முடியும்.
இருப்பினும் நடைமுறை அரசியலில் பௌத்த தேரர்கள் ஈடுபடுவதை பௌத்த மதம் தடை செய்துள்ளது. இன் நிலைமையை கருத்திற் கொண்டே தேரர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்றார்.

ad

ad