புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 பிப்., 2013


வேறொரு பிரபலமான இணையம்  இந்த நலன்புரி சங்கம் இங்கிலாந்தில் உள்ளது போல எழுதாமலும் ஸ்ரீதரன் எம் பி தானே  தென்னங்ககன்றுகளை தான்  செலவில் கொடுத்தது  தலையங்கம் தீட்டி  உள்ளது. கீழே  உள்ளதை கவனியுங்கள் (புங்குடுதீவு கிராமத்திற்கு பா.உறுப்பினர் சிறீதரனால் 1000 தென்னங்கன்றுகள் வழங்கி வைப்பு)புங்குடுதீவு நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் புங்குடுதீவு கிராமத்திற்கு 1000 தென்னங்கன்றுகள் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் ஊடாக மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.)
இங்கிலாந்தின் புங்குடுதீவு நலன்புரிச்  சங்கம்  சுமார் 1000 பவுண்ட்ஸ் செலவில்  புங்குடுதீவு கிராமத்திற்கு 1000 தென்னங்கன்றுகள்  கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் ஊடாக மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 
கடந்தவாரம் புங்குடுதீவு பிரான்சிஸ் சேவயர் ஆலயத்தில் புங்குடுதீவு பங்குத் தந்தை லியோ ஆம்ஸ்ரோங் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வின்போது குறித்த தென்னங்கன்றுகளை பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் மற்றும் வலிவடக்கு பிரதேசசபை உபதலைவர் எஸ்.சஜீபன் ஆகியோர் பொது மக்களுக்கு வழங்கியுள்ளனர்.
புங்குடுதீவு கிராமத்தில் யுத்ததினால் அழிக்கப்பட்ட பெருமளவு தென்னைகளை மீள வும் உருவாக்கவும், அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை மீளக்கட்டியெழுப்பவுமாக இந்த உதவிகள் அமையும் என குறித்த உதவி வழங்கும் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ad

ad