புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 மார்., 2013




          "இலங்கையில் ராஜபக்சே நடத்திய இனப்படுகொலைகளுக்கு சர்வதேச விசாரணை நடத்து' என்று உலகத் தமிழர்களும் மனித உரிமை அமைப்புகளும் குரல்கள் கொடுத்து வருகின்றன. இந்தச் சூழலில்,  ஐ.நா. மனித உரிமை கவுன்சிலி
      ""ஹலோ தலைவரே... இப்ப தமிழகம் முழுக்க ஒரே போர்க் குரலாக் கேட்குது பார்த் தீங்களா?''’

""ஆமாம். இலங்கைக்கு எதிரா ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா கொண்டுவரும்  தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கணும்ன்னு ஒரு பக்கம் தமிழுணர்வாளர்கள் போர்க்குரல் எழுப் பிக்கொண்டிருந்த நேரத்தில், இப்ப இதே கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம்


சிறந்த விமானநிலையங்களாக 3 இந்திய விமானநிலையங்கள் தேர்வு
 
2012-ம் ஆண்டில் உலகிலேயே மிகச்சிறந்த 5 விமானநிலையங்களுள் ஒன்றாக, தரமான விமான சேவையின் மூலம் வருடத்துக்கு 25 முதல் 40 மில்லியன் பயணிகளைக் கையாளும் புதுடெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமானநிலையம் 2-

உலகம் முழுவதும் 120 கோடி கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான புதிய பாப்பாண்டவராக ஜார்ஜ் மரியோ பொர்கோகிலியோ தேர்வு செய்யப்பட்டார்.
இவர் அர்ஜெண்டினா நாட்டை சேர்ந்தவர். இந்த அறிவிப்பையடுத்து வாடிகன் செயின்ட் பீட்டர் தேவாலயத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

இரண்டு வருடமாக , 2011 ஏப்ரலில் இருந்து தொடர்ச்சியாக ஐ. நா அறிக்கையூடாக அமெரிக்காவின் நகர்வினையும், ‘போர்க்குற்ற’ சொல்லாடலின் அரசியலையும் அந்த சொல்லாடலை மறுத்து ’இனப்படுகொலை’யே எனச் சொல்லவேண்டும் என்று நாங்கள் முன்வைத்தோம். ராஜபக்சேவினை தண்டிப்பது என்பதை விட தமிழீழ விடுதலையை மையப்படுத்தும் விவாதம் வேண்டும் என்று 2011 ஜூலை மாதம் முன்வைத்த போது கடும் அவதூற்றிற்கு உள்ளாகினோம்.
கோவை பாரதியார் பல்கலைகழகத்தில் மாணவர்கள் நடத்தும் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் 2-ம் நாளான இன்று புகைபடத்தில் இருக்கும் தோழர் ஜகதிஷ் (22 years) அவர்கள் காலை முதல் மாலை6.30 வரை தண்ணீர் கூட அருந்தாமல் போராட்டத்தில் ஈடுபட்டார். இவரால் நடக்கவோ, உட்காரவோ முடியாது.
தோழர்களே, மாணவர்களே வாருங்கள் போராட்டத்திற்கு ...
சற்று முன் : கும்பகோணத்தில் நடந்து வரும் அரசினர் கலைக் கல்லூரி மாணவர்களின் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டம் -நேரடி காட்சிகள் இவை 
மாணவர்களை வாழ்த்த ஆதி .ராமசாமி -9629544289 வீரமணி 9500271504 நந்தகுமார் 9965772229 இளையராஜா 9994276759 புண்ணியமூர்த்தி 9790473650 கிருட்டிணகுமார் 9677990943 வினோத் 9789546438 இவர்களுடன் 40 மாணவர்கள் . அதில் ஜான்பீட்டர்,இராஜசேகரன் என்கிற இருவர் கண் பார்வை அற்ற தம்பிகள். வாழ்த்துங்கள் உறவுகளே..


 காரைக்குடி அழகப்பா கல்லூரி மாணவிகள்.. நன்றி தங்கங்களே..
காரைக்குடி அழகப்பா கல்லூரி மாணவிகள்.. நன்றி தங்கங்களே..
"இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேர
இனப்படுகொலையை நிகழ்திய சிறிலங்கா அதிபர் ராசபக்சேவை தண்டிக்கக்கோரியும் சுதந்திர தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூரில் 5000ற்கு மேற்பட்ட

இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தின் இறுதி வரைவு தொடர்பில் சர்வதேச மன்னிப்புச்சபை கருத்து
இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போரில் நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை தற்போதைய அமர்வில் அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மான வரைவு உறுப்பு நாடுகளுக்கு சுற்றுக்கு
புங்குடுதீவு மடத்துவெளி பாலசுப்பிரமணியர் கோவில்,ஊரதீவு பாணா விடை சிவன் ஆலயம் என்பன  புனருத்தாரணம் செய்யப்படுகிறது படங்கள் இணைக்கப் பட்டுள்ளன 

தாயகத்தின் போர்க்கால சூழ்நிலையை அடுத்து பாரிய அழிவுகளை சந்தித்த புங்குடுதீவு ஆலயங்கள் சீரமைக்கப் பட்டு மீண்டும் கும்பாபிசேஷங்கள் செய்யப் பட்டு வருகின்றன .இந்த வரிசையில் மடத்துவெளி முருகன் ஆலயமும் சுவிஸ் வாழ் மடத்துவெளி ஊரதீவு மக்களின் கூட்டு முயற்சியில்
புதிய ராஜகோபுரம் அமைக்கப் பட்டு வருவதோடு ஆலயம் முற்று முழுதாக திருத்தி அமைக்கப் பட்டு  முடிவுறும் நிலையில் காணப் படுகிறது .பாரிய இயந்திரங்களை பயன்படுத்தி நவீனமுறையில் இந்த ஆலயம் கும்பாபிசெகாத் துக்கு தயாராகி வரும் வேளையில் இன்னும் பல திருப்பணி வேலைகள் தேங்கி உள்ளன.இது வரை பங்களிப்பு செய்யாதவர்கள் மற்ற நாடுகளில் இருந்து கூட இதற்கு உதவிடுமாறு அன்போடு அழைக்கின்றோம் .இந்த ஆலய திருப்பணி வேலைகளை கனடாவில் இருந்து தாயகம் திரும்பி உள்ள சமூக சேவையாளர் அ .சண்முகநாதன் (கண்ணாடி )அவர்களே நேரடியாக பார்வையிட்டு கவனித்து வருகிறார் ஊரதீவு பானாவிடை சிவன் ஆலயமும் முற்று முழு தாக மேலும் சீரமைக்கப்டுகிறது .சுவிசில் உதவ விரும்புவோர் தொடர்பு கொள்ளவும் அருணாசலம் கைலாசநாதன் (குழந்தை )

                                          எனது கண்ணீர் அஞ்சலி 
                                                          சசிபாரதி 
                                  முன்னாள் ஈழநாடு ஆசிரியபீடம் 
எண்பதுகளின் ஆரம்பத்தில் நான் ஈழநாடு நிருபராக  இருந்த போது  மதிப்புக்குரிய சசி பாரதி அவர்களை எப்போதாவது காரியாலயத்தில் கண்டு ஓரளவு புன்முறுவல் பழக்கம்  தான் . இருந்தாலும் இவரது எழுத்துக்களை மொண்டிருகிறேன்.பெரும்பாலான காலம் இவர் ஒப்பு நோக்குனராகவும் சஞ்சிகை ஆசிரியராகவும் இருந்திருக்கிறார்.எனது இளமைக் காலத்தில் எல்லா ஞாயிறு பதிப்புகளும் எம்மை கவர்ந்திழுக்கும் .ஆனாலும் ஈழநாடு மட்டுமே கவர்ச்சி இல்லாது சினிமா இல்லாது வண்ணக் கலவைகள் இல்லாது தமிழை மட்டுமே நம்பி வெளிவந்து எங்கள் இளமைபருவத்தை சுண்டி இழுத்த பெருமையை பெற்றது .இந்த பெருமை மிகு ஞாயிறு வாரமலரின் பிரம்மா .சசிபாரதி இவரது காலத்தில் சரிசமமாக உதவி ஆசிரியராக இருந்த  எஸ்.எஸ்.குகநாதன் அவர்களை எனது உயர்ந்த நண்பனாக கிடைத்த பேறு பெற்றாலும் இவரோடு பழகும் காலம்  அரிதாகவே  எட்டியது .யாழ்ப்பான பத்திரிக்கை உலகின் முன்னோடி இன்று எம்மிடையே இல்லை வருந்துகிறேன் உங்களோடு இணைந்து .அஞ்சலிக்கிறேன்
                                    சிவ-சந்திரபாலன் -சுவிட்சர்லாந்து 
வவுனியாவில் 5 ஆயிரம் சிங்கள குடும்பங்களுடன் நாமல் கிராமம் : அசாத் சாலி


வவுனியாவில் நாமல் கிராமம் உருவாக்கப்பட்டு சிங்களக் குடியேற்றம் இடம்பெறுவதாக கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

சட்டக்கல்லூரி மாணவர்கள் மறியலில் கைகலப்பு : திருச்சி பரபரப்பு ( படங்கள் )
இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க கோரி திருச்சி சட்டக்கல்லூரி மாண வர்கள் டிவி.எஸ். டோல்கேட் அருகே சாலை மறியலில் ஈடுபட்டார்கள். 


சட்டக்கல்லூரி மாணவர்கள் பஸ் மறியல்
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக செங்கல்பட்டில் சட்டக்கல்லூரி மாணவர்கள் இன்று 3-வது நாளாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். Photos

சென்னை தாம்பரம் அருகே கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை
சென்னை மேற்கு தாம்பரம் அருகே இன்று (13.03.2013) அதிகாலை கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

5 துரோகிகள் விலகி போனதால் எங்கள் கட்சி அழிந்துவிடாது: பிரேமலதா

 
தே.மு.தி.க. மகளிர் அணி சார்பில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை, ஆசிட் வீச்சு, விலைவாசி உயர்வை கண்டித்தும், பூரண மதுவிலக்கு கோரியும் வள்ளுவர் கோட்டத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

இலங்கை கடற்படையால் ராமேஸ்வரம் மீனவர்கள் 18 பேர் கைது
ராமேஸ்வரம் மீனவர்கள் 16 பேர் 4 படகுகளில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த போது அவர்களை இலங்கை கடற்படை கைது செய்து,  தலைமன்னார் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றுள் ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.பிடித்துச் செல்லப்பட்ட மீனவர்கள் 18 பேரும் ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.
ஜெனிவாவில் சிறிலங்காவுக்குத் தொடங்கியது தலைவலி
ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 22வது அமர்வில்  நேற்று இடம்பெற்ற பொதுவிவாதத்தில் சிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளும் உரையாற்றியுள்ளனர். 
கொல்ல வேண்டாம் என்று கெஞ்சிய நடேசனின் மனைவியை சுட்டுக்கொன்ற சிறிலங்கா இராணுவ மேஜர்
தான் ஒரு சிங்களவர் என்றும் தன்னை கொல்ல வேண்டாம் என்றும் விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசனின் மனைவி வினிதா உரக்கக் குரல் எழுப்பிய போதும், சிறிலங்கா இராணுவத்தின் சிறப்புப் படைப்பிரிவின் மேஜர் ஒருவர் அவரைச் சுட்டுக் கொன்றார். 

ad

ad