புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 மார்., 2013


5 துரோகிகள் விலகி போனதால் எங்கள் கட்சி அழிந்துவிடாது: பிரேமலதா

 
தே.மு.தி.க. மகளிர் அணி சார்பில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை, ஆசிட் வீச்சு, விலைவாசி உயர்வை கண்டித்தும், பூரண மதுவிலக்கு கோரியும் வள்ளுவர் கோட்டத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.


ஆர்ப்பாட்டத்திற்கு பிரேமலதா விஜயகாந்த் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்களை அ.தி.மு.க.வில் சேர்க்கும் வேலையை செய்கிறார்கள். தே.மு.தி.க.வில் இருந்து 5 எம்.எல்.ஏ.க்கள் விலகிவிட்டால் கட்சியே அழிந்து விட்டதாக அர்த்தமல்ல. விலகிப்போன 5 எம்.எல்.ஏ.க்கள் ஓட்டுதான் நஷ்டம்.

சட்டசபையில் வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்த எத்தனையோ எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். அவர்கள் மீது எல்லாம் இவர்கள் கண்படவில்லை. தே.மு.தி.க. எம்.எல்.ஏ. மீது மட்டும் கண்படுகிறது. இது தே.மு.தி.க. வளர்ச்சியை காட்டுகிறது.

5 துரோகிகள் விலகி போனதால் எங்கள் கட்சி அழிந்துவிடாது. அவர்கள் விலகிப் போனது ஒரு குழந்தையை வளர்த்து ஆளாக்கி பெருமை பாராட்டிய தாயின் பிணத்தின் துரோகிகளுக்கு வரலாறு இருந்ததாக சரித்திரம் இல்லை. யார் தலைவரோ அந்த தலைவரின் விடாமுயற்சியால் அவருடன் உறுதுணையாக இருப்பவர்களுக்கு தான் வரலாறு உண்டு.

5 எம்.எல்.ஏ.க்கள் இங்கிருந்து போய்விட்டார்கள். ஆனால் 50 லட்சம் தொண்டர்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். கோடை காலம், குளிர் காலம், இலையுதிர் காலம் போன்ற காலங்கள் உள்ளதுபோல இப்போது இலையுதிர் காலம். அதனால் 5 இலை உதிர்ந்து உள்ளது. ஆனால் தே.மு.தி.க. என்ற ஆலமரம் தமிழகம் முழுவதும் வேரூன்றி பரவி வருகிறது.

அந்த 5 தொகுதி மக்களுக்கு சொல்கிறேன். உங்கள் வாக்குகளை மட்டுமல்ல உங்களையும் அவர்கள் விற்றுவிட்டார்கள். அவர்களுக்கு அந்தந்த தொகுதி மக்கள் பாடம் புகட்ட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ad

ad