புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 மார்., 2013

      ""ஹலோ தலைவரே... இப்ப தமிழகம் முழுக்க ஒரே போர்க் குரலாக் கேட்குது பார்த் தீங்களா?''’

""ஆமாம். இலங்கைக்கு எதிரா ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா கொண்டுவரும்  தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கணும்ன்னு ஒரு பக்கம் தமிழுணர்வாளர்கள் போர்க்குரல் எழுப் பிக்கொண்டிருந்த நேரத்தில், இப்ப இதே கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம்
nakeeran  தழுவிய அளவில் மாணவர்களும் வெடித்தெழ ஆரம்பிச் சிட்டாங்க. இதுக்கிடையில் டெசோ அறிவிச்ச பொது வேலை நிறுத்தம் வேற. அதான் தமிழகம், முழுக்க முழுக்க இப்ப தணல் மயமா மாறி இருக்கு. அதே சமயம் ஈழ விவகாரம்ன் னாலே அரசியல் உள்ளே புகுந்து விளையாடுது பார்த்தியா?''’

""ஆமாங்க தலைவரே, ஈழ விவகாரத்தில் அரசியல் கட்சிகள் குறுக்கீடு இல்லைன்னா, அவங்களுக்கான தீர்வு எப்போதோ கிடைச்சிருக்கும். இப்ப டெசோ சார்பில் பொதுவேலை நிறுத்தம்ன்னு அறிவிச்சதுமே வைகோ, இதை அறிவிக்க கலைஞ ருக்கு தகுதி இல்லைன்னு சூடா அறிக்கை விட்டார். ஈழத்தமிழர்களுக்கு பா.ஜ.க. அரசு முன்பு உதவி செய்தது என்று சொல்லும் வைகோ, 2004-ல் அந்த பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகி, காங்கிரஸ் கூட்டணியில் நின்னு ஜெயிச்சதை மறந்துட்டு இப்ப கொதிச்சிருக்கார். டெசோ அறிவிச்ச பொது வேலை நிறுத்தத்தை, டெசோவில் அங்கம் வகிக்கும் சிறுத்தைகள், திராவிடர் கழகம் தவிர்த்த வேறு எந்தக் கட்சியும் ஆதரிக்கலை.''

""பா.ம.க.ராமதாஸும் ம.ம.க. ஜவாஹி ருல்லாவும் அரசே அனைத்துக் கட்சி கூட்டத் தைக் கூட்டி பொது வேலைநிறுத்தத்தை அறிவிக்கணும்ன்னு சொல்லியிருந்தாங்களே.''’’

""அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டறவங்களா இவங்க? இந்த பந்த் குறித்து டி.ஜி.பி., உள்துறைச் செயலாளர்ன்னு அதிகாரிகளை 11-ந் தேதி அழைத்து ஆலோசித்த ஜெ.’வழக்கம் போல அன்னைக்கு எல்லாமும் இயங்கணும். போலீஸ் பாதுகாப்போடு பேருந்துகளை இயக்கணும்ன்னு சொன்னாங்க. அதேபோல் யாராவது கடைகளை மூடுங்கன்னு சொன்னா, அவங்களைக் கைது செய்து பிறகு விடுவிக்கணும்னும் உத்தரவு போட்டாங்க. கலைஞர் போராட்டத்துக்கு வந்தால் அந்த சூழலுக்கு ஏற்ப முடிவெடுக்க வேண்டும்னு ஆலோசிச்சிருக்காங்க. அதே சமயம் பல இடங்களில் உ.பி.க்கள் பொது வேலை நிறுத்தம் குறித்த துண்டறிக்கைகளை கடைகடையா விநியோகித்து கடைகளை மூடச்சொன்னாங்க. மக்களிடம் ரெஸ்பான்ஸ் இருந்ததா அறிவாலயத் துக்கு தகவல் வந்துக்கிட்டே இருந்ததாம்..''’


""பிரதான எதிர்க்கட்சியான தே.மு.தி.க. இந்த விவகாரத்தில் அதிக முக்கியத்துவம் காட்டலியே?''’

""தலைவரே, விஜயகாந்த், வெய்யிலுக்கு இதமா அங் கங்கே தண் ணீர் பந்தல் வைக்கும்படி கட் சித் தொண்டர்களைக் கேட்டுக்கிட்டிருக்கார். காரணம் ஒருவித வெய்யில் அவரை வாட்டிக் கிட்டிருக்கு.''’

""அவங்க மரத்தில் இருந்து இன்னும் இலைகள் உதிரப்போகுதுன்னு தகவல் வருதே.''’

""உண்மைதான். செங்கம் சுரேஷைத் தொடர்ந்து, கெங்கவல்லி எம்.எல்.ஏ.சுபாவும் இலைத் தரப்புப் பக்கம் போகப் போறதா விஜயகாந்த் காதுக்கு தகவல் போயிருக்கு,. அவங்களைக் கூப்பிட்டு பேசிய விஜயகாந்த், கடைசியில் தன் னிரக்கமா, அந்த சுரேஷ் கூட முதல்நாள் என் கிட்ட நல்லாதான் பேசினார். யாரை நம்பறது? அந்த அம்மா ஏகத்துக்கும் பணத்தை வச்சிக்கிட்டு எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்குதுன்னு வருத்தப்பட்டிருக்கார். அதேபோல் வரும் எம்.பி. தேர்தலில் தி.மு.க.வோடு கூட்டணி கூடாதுங்கிறது பண்ருட்டியார் கருத்து. கருப்பு எம்.ஜி.ஆர்ன்னு விசுவாசிகள் வர்ணிக்கும் போது விஜயகாந்த தி.மு.க.வோடு நட்புகொள்ளக் கூடாதுங்கிறது அவரது வாதம். இதைக் கேட்டதிலிருந்து இப்ப பண்ருட்டியாரிடமும் சரியா பேசறதில்லை விஜயகாந்த். சமீ பத்தில் தன் மைத்துனர் சுதீஷைக் கூப்பிட்டு, நாம ராஜ்யசபாவை எதிர்பார்க்க முடியாது. அதனால தேர்தலில் போட்டியிட ரெடி யாகுன்னு சொல்லியிருக்கார்.''’


""ராமதாஸ் மகன் அன்புமணி குறிவைத்திருக்கும் ஆரணி தொகுதியைத்தான் சுதீஷும் குறிவச்சிருக் காராமே?''’

""அந்தத் தகவலும் உங்க காதுக்கு வந்துடுச்சா? உண்மைதான். ஆரணியில் தன் டீமை களமிறக்கி சாதக பாத கம் பார்த்துக்கிட்டிருக்கார் சுதீஷ். இதுக்கு இடையில் ஒரு காவி ஆசாமி தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் இனி ஆட்சிக்கு வரக்கூடாதுன்னு சவடால் விட்டிருக்கார்.''’

""இதுவும் தெரியும். ஆபாசச் சாமியாரான நித்தி, தன் பக்தர்களுக்கு சிவராத்திரி அன்னைக்கு ஆன்லைனில் அருள்பாலிச்சிருக்கார். அப்ப, இன்னைக்கும் நான் மதுரை ஆதீனத்தின் இளைய மடாதிபதியாத்தான் இருக் கேன். அது மட்டுமல்ல கும்பமேளாவில் என் திறமையைப் பார்த்துட்டு மகா மண்டலேஸ்வரர் பட்டம் கொடுத்தாங்க. தமிழ்நாட்டை 60 வருடமா தி.மு.க., அ.தி. மு.க.ன்னு திராவிடக் கட்சிகளே ஆளுது. இதை மாற்றிக் காட்ட நினைச்சேன். அதனால்தான் என்னை ரெண்டு கட்சியும் எதிர்க்குதுன்னு உதார்விட்டிருக்கார். இதோட அவர் நிக்கலை. 10 ஆயிரம் வருசத்துக்கு முன்ன கௌதம முனிவர் திருவண்ணாமலை யில் தங்கியிருந்த ஆசிரமத்தை இவர் பேருக்கு எழுதி வைக் கப்போறாங்களாம். சிவனோட கோபித்துக்கொண்டு வந்த பார்வதி இந்த ஆசிர மத்தில்தான் தங்கினாங்களாம். அவங்களை சிவன், அர்த்தநாரீஸ்வரரா வந்து சமாதானப்படுத்தினாராம். ஆணும் இல்லாம பெண்ணும் இல்லாம அர்த்த நாரீஸ்வரரா இறைவன் காட்சி கொடுத்த ஆசிரமம் என்பதால், நிஜத்தில் அர்த்த நாரீஸ்வரரா இருக்கும் தன்னிடம் ஒப்ப டைப்பது சிறப்பானதுன்னும் சொல்லி யிருக்கார். பேசாம அவரை சினிமாவில் காமெடி ஸ்க்ரிப்ட் எழுதச்சொல்லலாம். சரி, கிரானைட் மோசடி மன்னன் பி.ஆர். பி., மறுபடி தலைமறைவாயிட்டாராமே?''’

""ஆமாங்க தலைவரே. அரசு விதி முறைகளை மீறி வீட்டுமனைப் பட்டா வுக்கான நிலத்தில் கிரானைட்டை இந்தத் தரப்பு வெட்டி எடுத்ததா வி.ஏ.ஏ. கொடுத்த புகாரில், பி.ஆர்.பி.யின் மகன் சுரேஷ்குமார் உட் பட 9 பேர் மேல் எப்.ஐ. ஆர். போட்டாங்க. இதில் பி.ஆர்.பி. பேரையும் சேர்க் கணும்ன்னு மதுரை எஸ். பி.க்கு உத்தரவு வந்துச்சாம். இது தெரிஞ்சதும், இன் னொரு தடவை ஜெயில் வாழ்க்கையை அனுபவிக்க முடியாதுப்பான்னு எஸ்கேப் ஆயிட்டார். ஏற்கனவே தன் உறவின ரான ஐ.ஏ.எஸ். அதிகாரி மூலம் மேலிடத்தை சந் திச்சி சமாதானமாக தூது விட்டிருந்தார். அது பலிக் கலை. இப்ப சென்னை யில் பதுங்கிய நிலையில் அதே முயற்சியை வெவ் வேறு வழிகளில் டிரைப் பண்ணிக்கிட்டி ருக்கார். அப்புறம் அடுத்த மாசம் கொட நாடு அருகே கூடலூர் பக்கத்தில் இருக்கும் ஒரு கோயிலுக்கு ஜெ.’ போகப்போகிறாராம்.''’

""அதை நான் சொல் றேன். கோவேலிங்கிற கிரா மத்தில் இருக்கும் சந்தன முருகன் கோயில் என்ற, மிக மிக சிறிய ஒரு கோயிலுக்கு அவங்க போகப் போறாங்களாம். அதுக்காக நீலகிரி கலெக்டர் ரெண்டு தடவை அந்த இடத்தை வந்து பார்த் துட்டுப் போயிருக்காங்க. அப்படி அந்தக் கோயில்ல என்ன விசேஷம்ன்னு ரொம்ப தலையைப் பிய்ச்சிக்காதே. நீ வேணும்ன்னா அங்க ஒருதரம் போய் பார்த்துட்டு வா. அதுக் குப்பக்கத்திலேயே மூன்று எஸ்டேட்டுகள் விற்பனைக்கு வருதாம். முடிஞ்சா விலையை விசாரிச்சிப் பார்த்துட்டுவா.''’

 லாஸ்ட் புல்லட்!

டெல்லியில்  நடத்தப்பட்ட டெசோ மாநாட்டுக்கு, உரிய முறையில் தங்களை கூப்பிடவில்லை என்ற ஆதங்கம் வடமாநிலத்தைச் சேர்ந்த பல தலைவர்களிடமும் இருக்கிறது. வெறுமனே கடிதம் மட்டும் வந்தது. மற்றபடி ரெஸ்பான்ஸானவர்கள் யாரும் இது பற்றி தன்னிடம் பேசவில்லையே என்று சொல்லியிருக்கிறார் பா.ஜ.க. வெங்கையா நாயுடு. இதே ஆதங்கத்தில் இருக்கும் முன்னாள் பிரதமரான தேவே கவுடா, ‘ஒரு போன் அழைப்பு கூட எனக்கு வரவில்லை. வந்திருந்தால் மாநாட்டில் கலந்துகொண்டிருப்பேன்’ என்று தன் நண்பர்களிடம் சொல்லியிருக்கிறார். மாநாட்டில் கலந்து கொண்ட மத்திய மந்திரி குலாம்நபி ஆசாத்,  மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் கையெழுத்திடும் மினிட் புக்கில் கூட கையெழுத்துப் போடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

டி.ஜி.பி. ராமானுஜம் ஓய்வுபெற்ற நிலையிலும், அவருக்கு பதவி நீட்டிப்பு கொடுத்து வைத்திருக்கிறது ஜெ.’அரசு.  ஆனால் இதற்கான ஒப்புதல் பல்வேறு காரணங்களால் மத்திய அரசிடமிருந்து கிடைக்கவில்லை. அதனால் இந்த பதவி நீட்டிப்பு குறித்த தகவல் அரசு கெசட்டிலும் வெளி யிடப்படவில்லை. அப்படி வெளியிடப்படாததால் அவருக்கான சம்பளத்தைக் கொடுக்க ஏ.ஜி. அலுவலகம் பரிந்துரைக்கவில்லை. டி.ஜி.பி.க்கு பதவி நீட்டிப்பு தரப்பட்டிருப்பதால், அவர் ஓய்வு பெற்றுவிட்டார் என்று ஏ.ஜி.அலுவலகத்துக்கு அரசால் தகவல் தரமுடியவில்லை. அதனால் அவருக்கு வரவேண்டிய ஓய்வூதியமும் பென்ஷனும் கூட அவருக்கு கிடைக்கவில்லை.

டெல்லியில் டெசோ மாநாட்டை நடத்தி முடித்த சூட்டோடு, சிங்கப்பூருக்கு குடும்பத்தோடு டூர் கிளம்பிவிட்டார் ஸ்டாலின். அவரை விமர்சித்ததன் மூலம் கட்சிக்காரர்களால் தாக்குதலுக்கு ஆளான நடிகை குஷ்பு, இதன் பின் கட்சி அறிவித்த இரண்டு போராட்டங்களில் தலைகாட் டாது ஒதுங்கியிருந்தார். ஸ்டாலினின் மணிவிழாவுக்கு கூட குஷ்பு போகவில்லை. இந்த நிலையில் ஸ்டாலின் ஊரில் இல்லாத நேரத்தில் 9-ந் தேதி தன் கணவர் சுந்தர்.சி.யுடன் கோபாலபுரம் வந்த குஷ்பு, தன் கல்யாண நாளுக்கு வாழ்த்தும்படி கலைஞரைக் கேட்டுக்கொண்டார். கலைஞரோ, உடல்நலம் இல்லாத நிலையில் இருக்கும் தனது திருமதி தயாளு அம்மாளோடு சேர்ந்து குஷ்பு தம்பதியினரை வாழ்த்தி மகிழ்ந்தார்.

 தனது ஆதரவாளரான யுவராஜை, இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து எடுக்கவேண்டாம் என்ற கோரிக்கையை ராகுல்காந்தி யிடம் கொண்டு சென்றிருந்தார் வாசன். ஆனால் இதை காதில் வாங்கிக்கொள்ளாமல் யுவராஜை பதவியில் இருந்து தூக்கிவிட்டார் ராகுல். இதில் வாசனுக்கு வருத்தமான வருத்தம். இந்த நேரத்தில் வாசனுக்கு தமிழக காங்கிரஸில் இருக்கும் செல்வாக்கை ராகுலுக்கு உணர்த்த விரும்பிய, வாசனின் மைத்துனரான சுரேஷ் மூப்பனாரும் சித்தப்பா ரங்கசாமி மூப்பனாரும் ஒரு சீனைக் கிரியேட் செய்தனர். இதன்படி வாசன் ஆதரவாளர்கள் திரண்டு வந்து, நீங்கள் உங்கள் அப்பாவைப் போல்  மறுபடியும் த.மா.கா.வைத் தொடங்குங்கள் என்று கோரிக்கை வைத்தனர். இது குறித்த செய்தி மீடியாக்களில் பலமாக வெளிவந்தது. இதைப்பார்த்த பிறகாவது ராகுல் தன்னை அழைத்துப்பேசி, தனக்கான மதிப்பைக் கொடுப்பார் என்பது வாசன் தரப்பின் நம்பிக்கை. ஆனால் பலனில்லையாம்.

ad

ad