புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 மார்., 2013

கொல்ல வேண்டாம் என்று கெஞ்சிய நடேசனின் மனைவியை சுட்டுக்கொன்ற சிறிலங்கா இராணுவ மேஜர்
தான் ஒரு சிங்களவர் என்றும் தன்னை கொல்ல வேண்டாம் என்றும் விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசனின் மனைவி வினிதா உரக்கக் குரல் எழுப்பிய போதும், சிறிலங்கா இராணுவத்தின் சிறப்புப் படைப்பிரிவின் மேஜர் ஒருவர் அவரைச் சுட்டுக் கொன்றார். 

இதனை நேரில் பார்த்த சாட்சிகள் தன்னிடம் கூறியதாக பிபிசியின் முன்னாள் செய்தியாளர் பிரான்செஸ் ஹரிசன் ‘மரணங்கள் இன்னமும் எண்ணப்படுகின்றன‘ என்ற தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் மற்றும் ஏனையோர் வெள்ளைக்கொடிகளுடன் சிறிலங்கா படையினரிடம் சரணடைய முற்பட்டபோது, பொல்லுகளால் தாக்கப்பட்டு பின்னர் கொல்லப்பட்டதாக நேரில் பார்த்த சாட்சிகள் கூறினர்.

“நான் சிங்களவர், தயவுசெய்து என்னைக் கொல்லாதீர்கள்” என்று கூறிய பா.நடேசனின் மனைவியும் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்தப் படுகொலைகளை இடம்பெற்ற போது அதை நேரில் பார்த்த விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களும், பொதுமக்களில் ஒருவரும் இதுதொடர்பான விபரங்களை வெளியிட்டுள்ளனர்.  இவர்கள் தற்போது லண்டனில் உள்ளனர்.

சிறிலங்கா படையினர் சுட்டுக்கொல்ல முற்பட்டபோது, வினிதா சிங்களத்தில் கத்தினார்.

தான் ஒரு சிங்களவர் என்றும் தன்னைக் கொல்ல வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

ஆனால் சிறப்புப் படைப்பிரிவின் மேஜர் ஒருவர், இப்போது மட்டுமா உனக்கு சிங்களப் பாரம்பரியம் நினைவுக்கு வருகிறது என்று கேட்டவாறே வினிதாவை சுட்டுக் கொன்றார் என்று நேரில் பார்த்தசாட்சிகள் தெரிவித்துள்ளனர்.

பொல்லுகளால் தாக்கப்பட்ட பின்னர் நடேசன் கொல்லப்பட்டார்.

ஒட்டுமொத்த சம்பவத்தையும் இந்த சாட்சிகள் வெளிப்படுத்தியுள்ளதுடன், இதைச் செய்த சிறிலங்காப் படை அதிகாரிகளைத் தம்மால் அடையாளம் காட்டமுடியும் என்றும் தெரிவித்துள்ளனர்.

ad

ad