புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 செப்., 2013

தம்புள்ளை அம்மன் கோவிலிலிருந்து அனைவரும் வெளியேற வேண்டும்!- இனாமலுவ தேரர்
தம்­புள்ளை அம்மன் கோவில் அமைந்­துள்ள இடத்தில் குளம் ஒன்று நிர்­மா­ணிக்கும் பணி முன்­னெ­டுக்­கப்­பட்­டு­  வரும் நிலையில் தம்­புள்ளை விகா­ரா­தி­பதி இனாம­லுவ தேர­ரினால் அப்­ப­கு­தி­யி­லுள்ள மக்கள் இன்று வெள்­ளிக்­கி­ழமை அங்­கி­ருந்து வெளி­யே­ற வேண்டு­மென காலக்­கெடு விதிக்­கப்­பட்­டுள்­ளது. 
இலங்கையில் நடைபெற்ற கொலை மற்றும் பாலியல் துஷ்பிரயோகங்கள் பற்றி ஐ.நாவுக்கு அறிக்கை
இலங்கையில் கடந்த 2007ம் ஆண்டு முதல் 2011 ம் ஆண்டு வரையான 5 வருட காலத்தில் நடந்த கொலைச் சம்பவங்கள், பாலியல் துஷ்பிரயோகங்கள் பற்றிய தகவல்கள் அடங்கிய அறிக்கை ஐக்கிய
இராணுவம் நிறுத்திய வேட்பாளர்களுடன் ஹத்துருசிங்க வல்லிபுரக் கோயிலில் வழிபாடு!- ஆதாரப் புகைப்படங்கள் கசிந்தன
யாழ். இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்கவுடன் இராணுவ வேட்பாளர்கள், வடமராட்சியிலுள்ள  வல்லிபுரக் கோயிலுக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.
வடமாகாண சபைத் தேர்தலில் அரசாங்க கட்சியில் இராணுவத்தினரால் சில வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், அதனை உறுதிப்படுத்துவது போல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அனந்தி வீட்டில் நடந்த தாக்குதலுடன் இராணுவத்திற்கு தொடர்பில்லை!- இராணுவப் பேச்சாளர்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கீழ் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் அனந்தி (எழிலன்) சசிதரனின் வீட்டில் இடம்பெற்ற தாக்குதலுக்கும் இராணுவத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்தார்.
இலங்கை மீது போர்க்குற்றம் சுமத்தும் அமெரிக்கா உட்பட 5 நாடுகள் புலிகளுக்கு ஆயுதங்களை விற்றுள்ளன.
இலங்கை அரசாங்கத்தின் மீது போர்க் குற்றச்சாட்டுக்களை சுமத்தும் நாடுகள், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை விற்பனை செய்துள்ளன. குறிப்பாக ஐந்து நாடுகள் இவ்வாறு புலிகளுக்கு ஆயுதங்களை விற்பனை செய்துள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அனந்தி சசிதரன் மீது இனவாதத் தாக்குதல்: ஈழத்தமிழரை அமெரிக்கா உடனே காப்பாற்ற வேண்டும்: ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு !!!


வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில், வீட்டு சின்னத்தில் இலக்கம் 1 போட்டியிடும் திருமதி அனந்தி சசிதரன் (எழிலன்) அவர்கள் மீது இன்று அதிகாலை 12.20 மணியளவில் சிங்கள இராணுவம் மற்றும் ஈபிடிபி ஆகியோர் இணைந்து கொலை வெறித்தாக்குதலை மேற்கொண்டார்கள்.

இது திருமதி அனந்தி சசிதரன்(எழிலன்) அவர்கள் மீதான தாக்குதல் என்று மட்டும் பாராமல், எமது உரிமைக்காக குரல் கொடுத்தால் இப்படித்தான் தாக்குவோம் என்று சிங்கள அரசாங்கம் தமிழருக்கு மீண்டும் கூறியுள்ள செய்தியாகும்.

திருமதி அனந்தி சசிதரன் (எழிலன்) அவர்கள் ஒரு பெண் என்றும் பார்க்காமல் இப்படியான தாக்குதல் நடபெற்றமையானது, வடகிழக்கில் போரினால் கணவரை இழந்த 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விதவைகளுக்கும், 50ஆயிரம் அநாதையாகிப்போன பிள்ளைகளுக்கும் பாதுகாப்பு அற்ற நிலையை வெளிச்சம் போட்டு காட்டுகின்றது.

இச்சம்பவங்கள் மூலம் ஒரு செய்தி சொல்லப்படுகின்றது. அது என்னவெனில் தேர்தல் மூலம் சிறிலங்காவில் நல்லிணக்கமும், சமாதனமும் ஏற்படும் என்று நினைப்பவர்களுக்கு எப்பவுமே தமிழனும் சிங்களவனும் ஒன்றாக வாழ முடியாது என்பதையும், அப்படி வாழ்ந்தால் தமிழன் சிங்களவனுக்கு அடிமையாக மட்டுமே வாழமுடியும் என்பதையும், உரிமைக்கு குரல் கொடுத்தால் இதுதான் விளைவு என்பதை தமிழருக்கும் சர்வதேசத்துக்கும் சொல்லாமல் செல்லியுள்ளது சிங்கள அரசு.

எனவே எனியும் இலங்கையில் ஜனநாயகம் மலரும், உரிமைகளை சிங்கள அரசாங்கம் தமிழருக்கு உரிமையை பகிர்ந்து கொடுக்கும் என்ற எண்ணத்தினை கைவிட்டு அமெரிக்க உடனடியாக நேரடியாக ஈழத்தமிழரை காப்பாற்ற வேண்டும்.

விடுதலைப்புலிகளை அழிப்பதற்கு ஒருவகையில் சிங்கள அரசாங்கத்திற்கு உதவிய அமெரிக்கா, புலிகள் அழிக்கப்பட்ட பின்னர் தமிழர்கள் எதிர்நோக்கியுள்ள ஆபத்தான சூழ்நிலையில் இருந்து அவர்களை உடனடியாக காப்பாற்றுமாறு ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு அமெரிக்காவின் ஜனாதிபதி ஒபாமா அவர்களுக்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளது.அனந்தி சசிதரன் மீது இனவாதத் தாக்குதல்: ஈழத்தமிழரை அமெரிக்கா உடனே காப்பாற்ற வேண்டும்: ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு


வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில், வீட்டு சின்னத்தில் இலக்கம் 1 போட்டியிடும் திருமதி அனந்தி சசிதரன் (எழிலன்) அவர்கள் மீது இன்று அதிகாலை 12.20 மணியளவில் சிங்கள இராணுவம் மற்றும் ஈபிடிபி ஆகியோர் இணைந்து கொலை வெறித்தாக்குதலை மேற்கொண்டார்கள்.

இது திருமதி அனந்தி சசிதரன்(எழிலன்) அவர்கள் மீதான தாக்குதல் என்று மட்டும் பாராமல், எமது உரிமைக்காக குரல் கொடுத்தால் இப்படித்தான் தாக்குவோம் என்று சிங்கள அரசாங்கம் தமிழருக்கு மீண்டும் கூறியுள்ள செய்தியாகும்.
அனந்தி எழிலன் மீது நள்ளிரவில் ஈபிடிபியும் இராணுவமும் இணைந்து பாரிய தாக்குதல் சுழிபுரத்தில் பதட்டம்

சுழிபுரத்தில் அமைந்துள்ள அனந்தியின் வீட்டை நடுநிசியில் இராணுவத்தினரும் ஈபிடிபியினரும் வாள், கத்திகள், துப்பாக்கிகள் சகிதம் சுற்றி வளைத்ததாக அனந்தி தெரிவித்துள்ளார்.
உங்கள் ஈழத்து உறவுகளை வடமாகாண தேர்தலில் வாக்களிக்க ஊக்குவியுங்கள்-கவிஞர் பகீரதன் கனடா 

”அரசியல் ஒரு சூது”, ”அரசியல்வாதிகள் சுயநலவாதிகள்” என்கின்ற கருத்து காலம் காலமாக ஒப்புவிக்கப்பட்டு வந்தாலும், பல்வேறு சந்தர்ப்பங்களில், மேலைத்தேச-கீழைத்தேச அரசியலில் இது நிரூபணமாகியிருப்பினும், அரசியலில் இருந்து நாம் பிரிக்கமுடியாதவர்களாக உள்ளோம்
ஈபிடிபியினரும் இராணுவ புலனாய்வு பிரிவினருமே தனது வீட்டை சுற்றிவளைத்து தாக்கியதாக யாழ். மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் ஆனந்தி எழிலன் தெரிவித்துள்ளார். 

யாழ். சுழிபுரத்தில் உள்ள ஆனந்தியின் வீடு இன்று அதிகாலை இனந்தெரியாத நபர்களின் தாக்குதலுக்கு உள்ளானது. Video

19 செப்., 2013

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணையவுள்ளார் பதுமன்
தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட முன்னாள் கட்டளைத் தளபதி பதுமன் என்ற சிவசுப்ரமணியம் வரதநாதன் விரைவில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இணைந்து கொள்ள உள்ளதாக தெரியவருகிறது.
கிளிநொச்சி மாவட்டத்தில் கீதாஞ்சலிக்காக கபே அமைப்பு தேர்தல் பரப்புரை
கிளிநொச்சி மாவட்டத்தில் அரச கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியில் போட்டியிடும் கீதாஞ்சலிக்காக கபே அமைப்பு தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது.
தேர்தல் கண்காணிப்புக்கென இலங்கை அரசால் உருவாக்கப்பட்ட அரசின் புலனாய்வுப் பிரிவான கபே அமைப்பு சர்வதேசத்திற்கு தன்னையொரு நேர்மையானதும்,
தேர்தல் பிரச்சாரம் குறுந்தகவல்களின் ஊடாக தொடர்கின்றது
தேர்தல் பிரச்சாரம் குறுந்தகவல்களின் ஊடாக தொடர்வதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 
கே.பி.யை அரசாங்கம் தனது தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்தியமை பாரதூரமான குற்றம்: ஐ.தே.க
இலங்கையில் ஆயிரக்கணக்கான அப்பாவிகளின் உயிர்கள் அழிக்கப்பட்டத்தில் நேரடியாக பொறுப்புக் கூறவேண்டிய கே.பி. என்ற குமரன் பத்மநாதனை மக்களின் பணத்தில் அரசாங்கத்தின் தேர்தல் பிரசாரகராக செயற்பட இடமளித்தமை பாரதூரமா
இலங்கையின் தேர்தல் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும்!- பான் கீ மூன் நம்பிக்கை
இலங்கையின் நல்லிணக்கத்துக்கு எதிர்வரும் மாகாணசபை தேர்தல் நல்ல சந்தர்ப்பம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். 
அண்ணா மேம்பாலத்தில் தற்கொலை செய்த பெண்ணின் காதலன் கைது

கோடம்பாக்கம் காமராஜர் கிழக்கு தெருவில் குடியிருந்தவர் அஞ்சலி (26). மேற்கு வங்காளம் மாநிலத்தை சேர்ந்த இவர் நேற்று மாலை சென்னை அண்ணா மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொணடார். இதையறிந்

அதிமுக எம்.எல்.ஏ. 
புத்திசந்திரன் கைது
 


சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்து நீக்கம் செய்யப்பட்டவரும், நீலகிரி மாவட்ட ஊட்டி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.வுமான புத்திசந்திரன் கைது செய்யப்பட்டார்.   அவருடன் வந்த 29 பேரும் கைது செய்யப்பட்டனர்.
சுவிஸ் கிராமத்தில் நடைபெற்ற விபச்சாரம்

சுவிட்சர்லாந்தில் ஒதுக்குப்புறமான இடத்தில் செயல்பட்டு வந்த விபச்சார ஒட்டலினை பொலிசார் சோதனையிட்டுள்ளனர்.
காணாமல் போனவர்களின் அடையாளமே நான்: எழிலனின் மனைவி அனந்தி தெரிவிப்பு
நான் வெறுமனே விடுதலைப் புலிகளது திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளராகவிருந்த எழிலனின் மனைவி என்பதற்கப்பால் காணாமல் போயுள்ள ஆயிரமாயிரம் தமிழர்களதும் குடும்பங்களதும் அடையாளமாகவிருக்கின்றேன் என்பதே உண்மையாகும்.
ஆனால் இலங்கை அரசோ காணாமல் போனோர்களது நிலைபற்றி வாய் திறக்க மறுக்கின்ற அதே வேளை, அதற்காக குரல் கொடுப்பவர்களை அச்சுறுத்தி வாய்மூட வைக்க முற்படுவதாக அனந்தி சசிதரன்(எழிலன்) குற்றஞ்சாட்டியுள்ளார்.
தீவுப்பகுதி மக்களுக்கு அன்பான வேண்டுகோள் -ஐரோப்பிய தீவுப்பகுதி மக்கள் ஒன்றியம் 

எதிர்வரும் 21 ஆம் திகதி வடமாகாண  சபை தேர்தல் நடைபெறவுள்ள  நிலையில் நீங்கள்   என்ன செய்ய போகின்றீர்கள்? காலாகாலமாக தீவுப்பகுதி மக்கள் அரசியலில் தமிழ் தேசியத்தோடு ஒருசேர இணைந்து நின்றவர்கள். ஆதி முதல் தமிழ் காங்கிரஸ்.தமிழரசு கட்சி,தமிழர் விடுதலை கூட்டணி என்பவற்றை ஆதரித்து ஜனநாயக தேர்வுகளுக்கு உறுதியோடு இறுதி வரை இருந்தவர்கள். காலத்தில் கோலமாய்  எதிரிகளோடு துரோகிகளும் சேர்ந்து துப்பாக்கி முனையில் எம்மை ஆள  வந்து குடி கொண்ட பின்னர் எமது கோட்டை சரிந்தது  இல்லை இல்லை சரியவைத்தார்கள். வன்முறை.துப்பாக்கி கலாசாரம்.தப்பான தேர்தல் நடைமுறை என எல்லாவற்றையும் பயன் படுத்தி எதிரி  வென்றுள்ளதாகவோ பெரும் பான்மை பெற்றதாகவோ கொக்கரித்தான் .சிலவேளைகளில் தேசியம் சார்ந்தவர்கள் பகிஸ்கரிப்பு செய்ததாலும் இது நடக்க வாய்ப்பு கிட்டியது . இப்போது நல்ல காலம் கை கூடி வந்துள்ளது.இப்போது கூட தீவுப்பகுதியில் எதிரியின் ஆயுத கலாசாரம் நிலவுவதால் சரியான முறையில் தேர்தல் பிரசாரமோ பரப்புரையோ செய்ய முடியாத  நிலைதானுண்டு. என்ன தான் இருந்தாலும் இந்த அரிய வாய்ப்பினை பயன் படுத்தி எத்ரியை தோற்கடிக்க முன்வாருங்கள்.எமது இனப்  பிரச்சினைஐ நா  மன்றம் வரை போயிருக்கும் இவ்வேளையில் நீங்கள் துப்பாக்கி அடக்கு முறைக்கு அச்சம் கொள்ளாதீர்கள்.ஜனநாயக வாக்கெடுப்பில் கலந்து கொள்ள வேண்டும். வாக்களிக்கா விட்டால் கூட உங்கள் வாக்குகள் களவாடப் பட்டு எதிரி வாக்குககளாக மாறும்.எதிரி வியூகத்துக்கு அஞ்சாமல் வாக்களியுங்கள்,தேர்தல் வாக்களிப்பு முறை ரகசியமானது.எதிரிக்கு ஒரு முகத்தையும் வாக்களிப்பில் மறு முகத்தையும் காட்டி எமது தேசியத்துக்கு வழி  கோலும் தமிழ் தேசிய கூட்டமைப்பை வெல்ல வையுங்கள்.இல்லை இல்லை  அதிக பெரும்பான்மை பெற உதவுங்கள் மாற்றானை ஆதரிக்காத  எங்கள் மண் (முன்னரைபோல) என்று நிரூபியுங்கள்.எதிரி பதவிகள் பட்டங்கள் வசதிகள் செய்து தருகிறான் என்று ஏமாறாதீர்கள்.அந்த சேவைகள் எல்லாம் ஒரு அரசாங்கம் தங்கள் நாட்டு மக்களுக்கு செய்தே தான் ஆகவேண்டும் .அவை எல்லாம் தங்கள் சட்டைக்குள் இருந்து எடுக்கும் பணத்தின் மூலம் செய்வதில்லை.எல்லாம் பொது மக்களின் சொத்து தான்  எல்லா அமைப்புகளும் கட்சிகளும் இயக்கங்களும் எதோ ஒரு வகையில் தவறு செய்து தானுள்ளன.சந்தர்ப்பம் சூழ்நிலை  காரணமாக பிரிந்து போய் கிடந்த காலங்கள் அவை.இப்போது முதன் முறையாக அரச ஊதுகுழலான கட்சி ஒன்றை தவிர மற்றவை எல்லாம் தமக்குள்ளே ஒன்று பட்டு ஒரே குடையின் கீழ் உங்கள் முன் வந்துள்ளன.பழையவற்றை மறப்போம்.மண் ணுக்காக இனத்துக்காக குரல் கொடுக்கும் ஒரே கட்சி சின்னமான  வீட்டுக்கு புள்ளடி  இட்டு எமது இனத்தை மண்ணை காப்போமாக. இந்த வேண்டுகோளை வைக்க எங்களுக்கு உரிமையுண்டு.நாங்களும் உங்கள உறவுகள் ரத்தங்கள். பொருளாதார வளத்திலும் உங்களோடு ஒன்றாக இருப்பவர்கள் .எங்கள் இதய பூர்வமான இந்த வேண்டுகோளை ஏற்பீர்கள் என் நம்புகிறோம்  

நன்றியோடு                                                                         18.09.2013 
 ஐரோப்பிய தீவுப்பகுதி மக்கள் ஒன்றியம் 
தலைமையகம் சுவிட்சர்லாந்து 
tthamil 8@gmail .com 

                                   

ad

ad